பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
தமிழக மக்களிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சமையல் கலைஞர் செஃப் தாமு (கே. தாமோதரன்) உடல்நலப் பாதிப்பால் இன்று (அக்டோபர் 25) காலமானார். அவருக்கு வயது 72.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செஃப் தாமு, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமையல் துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவர், கடந்த 2010ம் ஆண்டு 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். இவரது சமையல் திறமைக்கும், சமையல் துறையில் ஆற்றிய பங்களிப்புக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றதன் மூலம் அனைத்து வயதினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றார். தனது தனித்துவமான அணுகுமுறை மற்றும் நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்த செஃப் தாமுவின் மறைவு, சமையல் துறையினரிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சி புகழ் குரேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செஃப் தாமுவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.