• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்... எம்ஜிஎம் மருத்துவமனை அறிவிப்பு

தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்... எம்ஜிஎம் மருத்துவமனை அறிவிப்பு

VS Babu Passed Away: சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மாரடைப்பு காரணமாக இன்று (நவ. 19) காலமானார். கடந்த 72 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஎம் மருத்துவமனை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

Written BySudharsan G
Published: Nov 19, 2026, 15:23 IST|Updated: Nov 19, 2026, 16:00 IST
joinshare
தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்... எம்ஜிஎம் மருத்துவமனை அறிவிப்பு
Image Credit: TVK MLA VS Babu Passed Away | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TVK Kolathur MLA VS Babu Passed Away: சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மாரடைப்பு காரணமாக இன்று (நவ. 19) காலமானார். கடந்த 72 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஎம் மருத்துவமனை இதை உறுதிப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு நீண்ட காலமாக நீடித்த சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முழுமையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, இன்று மதியம் 2.24 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார்" என அறிவித்துள்ளது. நுரையீரல் தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புரசை பாபு... திமுக டூ தவெக

1951ஆம் ஆண்டில் பிறந்தவர் வி.எஸ். பாபு. இவர் அயனாவரம், ஐசிஎஃப், புரசைவாக்கம், ஜமாலியா உள்ளிட்ட பகுதிகளில் அடிமட்டக் கட்சிப் பணிகளுக்குப் பெயர் பெற்றவர். அரசியல் வட்டாரங்களில் 'புரசை பாபு' என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.

திமுகவில் செயல்பட்ட காலத்தில், 2011ஆம் ஆண்டு வரை வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். 2006ஆம் ஆண்டில் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, சரியாக 20 ஆண்டுகள் கழித்து  மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலம் கட்சிப் பணியாற்றியதால், சாமானிய மக்களுடன் நேரடியான பழக்கம் கொண்டிருந்தார். தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் தவெகவில் இணைந்திருந்தார்.

தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளூர் அறிமுகமும் கொளத்தூரில் வாக்குகளாக மாறின. கடந்த 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

2011 தேர்தலில் போட்டியிடவில்லை

வி.எஸ். பாபு தவெகவில் இணையும் முன்னர் அதிமுக செயலாற்றினார் வந்தார் 2006ஆம் ஆண்டு இவர் எம்எல்ஏ-வாக இருந்த புரசைவாக்கம் தொகுதி அடுத்த 2011 தேர்தலின் போது, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நீக்கப்பட்டது.

தொடர்ந்து, புரசைவாக்கத்தின் சில பகுதிகள், வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதிகள் சேர்த்து 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

அடுத்த 2011 தேர்தலில் கொளத்தூர் போட்டியிட வி.எஸ். பாபு காத்திருந்தார். அதேநேரத்தில், மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட முன்வந்தார். அதற்கு முன்னர் வரை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு வந்தார்.

இதனால், திமுக வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ். பாபு தான் போட்டியிட கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றிக்காக அயராது உழைத்தார். அந்த தேர்தலில் வி.எஸ். பாபு எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை.

அதிமுக, அமமுகவில் செயலாற்றிய வி.எஸ். பாபு

2011ஆம் ஆண்டு ஜனவரியில் சேகர்பாபு அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். 2011இல் திமுக ஆட்சியை இழந்த பின்னர், வடசென்னை பகுதியில் சேகர்பாபுவின் கை ஓங்கியது. இதனால் வி.எஸ். பாபுவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துகொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

இதனால், 2017ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டனர், அதில் வி.எஸ். பாபுவும் ஒருவர். தொடர்ந்து அமமுகவில் இணைந்து செயல்பட்டார்.

தேர்தலுக்கு முன் தவெகவில் இணைந்தார்

பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து மாவட்ட செயலாளரானார். தொடர்ந்து சில காரணத்தால் மாவட்ட செயலாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

தொடர்ந்து, தேர்தலுக்கு முன் தவெகவில் இணைந்து திமுகவின் முதல்வர் வேட்பாளராக இருந்த ஸ்டாலினை எதிர்த்து களமாடி வெற்றிக் கண்டிருந்தார். அவர் வென்று நான்கு மாதங்களிலேயே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலான சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
TVK