SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி உடல் புதைப்பு? - சடலத்தை தேடும் போலீசார்... பரபரப்பு

ஜெம் வீரமணி வீட்டில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக அவரது ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் அவரது வீட்டில் சடலத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Written By Sudharsan G
Published: Nov 14, 2026, 14:04 IST | Updated: Nov 14, 2026, 22:06 IST
Image Credit: Gem Veeramani | Image Source : X
Join

ஜெம் வீரமணி வீட்டில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் உதவியுடன் குழித் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓட்டுநரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும், தொடர்ந்து அவரது சடலத்தை வீட்டிலேயே புதைத்ததாகவும் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார் ஜெம் வீரமணி வீட்டில் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய போலீசார்

ஒரு கூடுதல் துணை காவல் ஆணையர், மூன்று துணை காவல் ஆணையர் உள்ளிட்ட 20 போலீசார், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள், தடயவியல் துறையினர் என மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் ஜெம் வீரமணி வீட்டில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெம் வீரமணி வீடு முழுவதும் ஜேசிபி வாகனம் வைத்து பக்கவாட்டில் பல மீட்டர் நீளத்திற்கு பல அடி ஆழத்திற்கு தோண்டி வருகின்றனர். இதுவரை 15 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்றும் மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10வது நபராக பாலா கைது

ஜெம் வீரமணி வழக்கில் பாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலா என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று காலை முதல் ஜெம் வீரமணி வீட்டில் உடலை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பத்தாவது நபராக பாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை 6 மணியளவில் அங்கு குழித் தோண்டும் பணிகள் நிறைவுபெற்றன. இருப்பினும் சந்தேகத்திற்கிடமான வகையில் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை.

எதுவும் கிடைக்கவில்லை

சோதனை சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றதாக ஜெம் வீரமணியின் வழக்கறிஞர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார். அப்போது அவர், "இந்த நடவடிக்கைகளை கேமராவில் வீரமணியின் மனைவி பதிவு செய்தபோது ஆறு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவரின் கையை முறுக்கி போனை பிடுங்கி உள்ளனர்.

போனை பிடுங்கிக்கொண்டு, அவர்களை அறையில் உட்கார வைத்துள்ளனர், அவருக்கு வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மாலை 6.20 மணிக்கு அனைவருமே வெளியேறிவிட்டார்கள். வீட்டில் சோதனையிடுகிறோம், விசாரணை மேற்கொள்கிறோம் என மாலையில் இருந்து நோட்டீஸ் கொடுத்தார்கள், காலையில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லை.

அவர்களால் இங்கு எதையும் கண்டறிய முடியவில்லை என அவர்களே கைப்பட எழுதி கொடுத்துள்ளனர். இவர்கள் வேண்டுமென்றே அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி டார்ச்சர் செய்கிறார்கள். இரண்டாவது ராஜி வீரமணியிடம் வரம்பு மீறி உள்ளனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES