TN Rain Alert: அக்வான் புயல்; இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
Rain Alert Today: வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக இன்று (நவம்பர் 19) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவம்ழை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவம்பர் 19) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
சென்னை, திருவள்லூர் மாவட்டங்களுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல்.. தமிழகத்தில் மழை அதிகரிக்குமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு அக்வான் என பெயரிடப்பட்டுள்ளது. அக்வான் புயல் அந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால் அதன் தாக்கம் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலின் நகர்வு மற்றும் தீவிரத்தை பொறுத்து மழையின் அளவு மாறுபடக்கூடும். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆந்திர மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை இன்று வானிலை எப்படி இருக்கும்?
சென்னையில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது. நகரின் சில பகுதிகளில் கனமழையும், மற்ற இடங்களில் லேசான அல்லது மிதமான மழையும் பெய்யக்கூடும்.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்பு இருப்பதால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மழை காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
நவம்பர் 23, 24 தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு
நவம்பர் 18 முதல் 23ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். மேலும், நவம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.