SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

TN Govt Diwali Bonus: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில, முதல்வர் விஜய் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். குரூப் சி, டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விஜய் அறிவித்துள்ளார்.

Written By Umabarkavi K
Published: Oct 27, 2026, 03:24 PM IST | Updated: Oct 27, 2026, 03:50 PM IST
Join

TN Govt Diwali Bonus: தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். நாடு முமுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள் போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் விஜய் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். குரூப் C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஊதியச் சட்டத் தொகுப்பு 2019 (முன்பு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015) இன் படி, மிகை ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும், மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

யார் யாருக்கு எவ்வளவு போனஸ்?

இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400  மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். 

இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருப்பதி கோவிலுக்கு காசுமாலை அணிந்து வந்த விவகாரம்..அமைச்சர் கீர்த்தனா அதிரடி பதில்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES