• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

பல்வேறு கிளைகளை கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு தகவல் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 27, 2026, 05:06 PM IST|Updated: Oct 27, 2026, 05:12 PM IST
joinshare
60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..
Image Credit: Mircosoft | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

2

இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

3

60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

4

YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

5

ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சமீபகாலமாக, உலகின் பல்வேறு துறைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஐடி துறைகளில் இதனால் பல பேர் வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதில் இன்னும் அதிர்ச்சிக்குறிய விஷயமாக, எண்ட்ரி லெவல், மிட் லெவல் பணிகள் பலவற்றிலும் முன்னணி நிறுவனங்களே சமீப காலமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள்!

ஏஐ ஆதிக்கத்தால், ஏற்கனவே அமேசான், Oracle போன்ற முக்கிய முன்னணி நிறுவனங்கள் பல ஆட்குறைப்பு நடவடிக்கையை செய்து வருகிறது. இதையடுத்து, இன்னொரு முக்கிய நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தங்களிடம் வேலை செய்யும் 60000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கவும், செலவுகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரட்டன், இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஊழியர்கள், பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சேல்ஸ், மார்க்கெட்டிங், டேட்டா செண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்டின் ஆண்டு அறிக்கையின்படி 2026ஆம் ஆண்டு கடந்த ஜூன் மாதத்தின் 30ஆம் தேதி நிலவரப்படி, அந்த நிறுவனத்தில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.

மேலும் படிக்க | ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு

இழப்பீடு..

மைக்ரோசாஃப்டின் விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டு, வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணிநீக்க இழப்பீடு, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள், தொழில் மாற்றத்திற்கான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான பணி நீக்க இழப்பீடு வழங்கப்படும்!

இந்த இழப்பீடு, மைக்ரோசாஃப்ட்டின் வழக்கமான பணிநீக்க இழப்பீட்டுடன் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது. அதாவது, பணி அனுபவம் மற்றும் பதவியுடன் இணைக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம், தொடர்ச்சியான பங்கு உரிமை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மருத்துவ பாதுகாப்பு மற்றும் தொழில் மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவை இதில் அடங்குகின்றன. இதில் இல்லாதது என்னவென்றால், பல நீண்டகால ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத் திட்டத்தை எளிதாக ஏற்றுக்கொள்ளச் செய்த நீட்டிக்கப்பட்ட மருத்துவ பாதுகாப்பு ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட்டின் அமெரிக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகளில், பணிநீக்க இழப்பீடு 60 நாட்கள் அடிப்படைச் சம்பளத்தில் தொடங்கி, பெரும்பாலானோருக்கு 39 வாரங்கள் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கு?

டிசம்பர் முதல் வாரத்திற்குள் யார் வெளியேற விரும்புகின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்பவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதி நிறுவனத்தில் இருந்து வெளியேறுபவர்களாக இருப்பர்.

மேலும் படிக்க | இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

Add Zee News as a Preferred Source
TAGS:
India