• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

உத்தர பிரதேசத்தில் இருக்கும் தாஜ் ஹோட்டலில், ஒரு ஊழியர் வாடிக்கையாளரிடம் ஆங்கிலத்தில் பேச வராமல் திணறியுள்ளார். இதற்கு வாடிக்கையாளர் அந்த ஊழியரை கன்னத்திலேயே பளார் என அறைந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 27, 2026, 03:49 PM IST|Updated: Oct 27, 2026, 04:02 PM IST
joinshare
இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?
Image Credit: Taj Hotel Incident | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

2

ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!

3

இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

4

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

5

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியாவில், மிகப்பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றாக இருக்கிறது, தாஜ். இது, உலகளவில் பிரபலமான நிறுவனமாக இயங்குவதோடு, பல்வேறு கிளைகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. தொழிலதிபர்கள், பிரபலங்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட பலர் தங்குவதற்கு இந்த ஹோட்டலைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட நிர்வாகம், தங்கள் ஊழியரை ஒருவர் அறைந்து விட்டார் என தெரிந்தவுடன் அனைவரைும் ஆச்சரியப்பட வைக்கும் முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

தாஜ் ஹோட்டல் ஊழியரை அறைந்த வாடிக்கையாளர்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் இருக்கும் 5 ஸ்டார் தாஜ் ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு, சாப்பிடுவதற்காக கடந்த வாரம் விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். அங்கு, ஹோட்டல் பணியாளரான காந்தி அவருக்கு வேண்டிய உணவுகளை வழங்கும் வேலையாள் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

காந்தியிடம், அவர் சில உணவுகள் குறித்து ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார். காந்திக்கு, சரளமாக ஆங்கிலம் பேச இயலாத சூழல் இருந்திருக்கிறது. இதனால், விருந்தினர் கேட்டதற்கு பதில் கூற முடியாமல் காந்தி திணறி நின்றிருக்கிறார்.

இதனால் கோபமான அந்த விருந்தினர், காந்தியின் கன்னத்திலேயே அனைவர் முன்னிலையிலும் அறைந்திருக்கிறார். இதனால், சற்று நேரத்தில் அங்கு பரபரப்பு நிலவி இருக்கிறது. இதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதில் ஏதும் பேசாமல், காந்தி அடி வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துள்ளார்.

மேலும் படிக்க | நவம்பரில் LPG சிலிண்டர் விலை குறைகிறதா? e KYC, PNG.. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட்ஸ்

ஹோட்டல் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

காந்தி, இந்த சம்பவத்தின் போது அதிரடியாக இருந்தது மட்டுமல்லாமல், இது குறித்து யாரிடமும் பேசாமல், சொல்லப்போனால் தன்னுடைய மேலாளரிடமும் புகார் அளிக்காமல் இருந்திருக்கிறார்.

எப்படியோ, தங்கள் ஊழியரை வந்திருந்த விருந்தினர் ஒருவர் அறைந்திருக்கிறார் என்பது ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து தாஜ் ஹோட்டல் நிர்வாகம், இந்த செயலை செய்த விருந்தினர் மீது தகுந்த நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

இனி தாஜ் ஹோட்டலுக்குள் நுழையவே முடியாது..!

தாஜ் ஹோட்டலில் நடந்த இந்த சம்பவம் குறித்து, தாஜ் ஆக்ரா ஹோட்டலை நிர்வகித்து வரும் இணைஇ இயக்குநரான பரிதோஷ் லதானி பேசியிருந்தார். அப்போது, வெயிட்டரின் கன்னத்தில் அறைந்த விருந்தினர், தாஜ் ஹோட்டலில் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கபப்டுவதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஒரு சமூக வலைதள பதிவும் வெளியாகி இருக்கிறது. அதில், தங்களின் பணியாளரிடம் அவர் செய்த இந்த கொடூர் செயலால், எங்கள் தாஜ் ஹோட்டலில் இருந்து அவருக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதித்துள்ளோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்!

இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட காந்தி விருந்தினருக்கு பரிமாறி கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராததால், விருந்தினருடன் ஏதோ ஒரு தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது (Miscommunication). இதன் விளைவாகத்தான், அந்த விருந்தினர் அவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார். அப்போது காந்தி அமைதியாகவே இருந்து, புகாரும் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டு, “ஏன் புகார் தெரிவிக்கவில்லை?” என்று விசாரித்த போது, காந்தி கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவர், தன் வேலையை மிகவும் மதிப்பதால், எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

காந்தி, ஏழ்மை நிலையில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவராக இருக்கிறார். இதனால், இவரால் ஆங்கிலத்தில் பேச முடியாமல் போயுள்ளதாக தெரிகிறது. தற்போது தாஜ் ஹோட்டலின் இணை இயக்குநருக்கும், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த ஹோட்டல் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் இணையத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Explainer: பிஎம் கிசான் 24வது தவணை 3 நாட்களில் வருகிறது.. யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?

Add Zee News as a Preferred Source
TAGS:
India