SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வி.எஸ். பாபுவின் உடலை சுமந்த CM விஜய்... இறுதி ஊர்வலம் தொடங்கியது

மறைந்த தவெக எம்எல் ஏ வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்நிலையில், வி.எஸ். பாபுவின் முதலமைச்சர் விஜய் சுமந்து சென்றார். தவெக தொண்டர்கள், பொதுமக்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

Written By Sudharsan G
Published: Nov 20, 2026, 16:27 IST | Updated: Nov 20, 2026, 20:35 IST
Image Credit: CM Vijay at VS Babu Funeral | Screen Grab: X
Join

Late TVK MLA VS Babu Funeral: சென்னை கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று நீண்ட காலமாக நீடித்த மூச்சுக் கோளாறு காரணமாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வந்த இவரின் உடல்நிலை குறித்த அப்டேட் வெளிவராமலேயே இருந்தது. அந்த வகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 72 நாட்கள் பின், நேற்று (நவ.19)மாரடைப்பு காரணமாக வி.எஸ்.பாபு உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

உடலை தோளில் சுமந்து சென்ற CM விஜய்

இதைத் தொடர்ந்து, வி.எஸ். பாபு உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் வி.எஸ். பாபு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலம் செல்வதற்கு வி.எஸ். பாபு உடலை வாகனத்தில் ஏற்ற உறவினர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் விஜய்யும் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

செருப்பின்றி நடந்து சென்ற CM விஜய்

முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவெக தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் காலில் செருப்பின்றி நடந்தே சென்றார். வி.எஸ். பாபுவின் உடல் திரு.வி.க நகர் மின் மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES