SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இதுதான் உங்க சமூக நீதியா.. வெளிநாட்டில் தவிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத விஜய் அரசு?

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தில் மாணவர்களுக்கு நிதி வழங்குவதில் தாதமம் ஏற்படுவதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Written By Umabarkavi K
Published: Nov 13, 2026, 12:15 PM IST | Updated: Nov 13, 2026, 02:16 PM IST
Join

Annal Ambedkar Scholarship Scheme: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டமாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் உயர்கல்வி பயில நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியுதவி இருமடங்காக உயர்த்தி, 131 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதவித்தொகை வழங்குவதில் தாமதம்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல மாணவர்கள் கல்விக்கட்டணம், தங்குமிடம் கட்டணம், அன்றாட செலவுகளைச் சமாளிக்க போராடி வருகின்றனர். 

2026-27ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் அரசு 365 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து என ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. இதில் 164 மாணவர்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள நிலையில், 19.53 கோடி ரூபாய்  மதிப்பிலான கல்வி உதவித்தொகை 65 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மொத்த தேர்வு செய்யப்பட்ட 365 மாணவர்களில் 201 மாணவர்கள் பல்கலைக்கழங்களில் சேராமல் இருக்கின்றனர். இதில் லண்டனில் 141 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 9 மாணவர்களும், அயர்லாந்தில் 5 மாணவர்களும், துபாயில் 5 மாணவர்களும், கனடாவில் 4 மாணவர்களும் பல்கலைக்கழங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: தாங்க முடியாத அளவில் விலைவாசி உயர்வு.. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.. சொதப்பும் CM விஜய்?

உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏன்?

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கூற்றுப்படி, நடைமுறை சிக்கல்கள் மற்றும் நீண்ட கால சரிபார்ப்புப் பணிகள் காரணமாகவே  உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள், உதவித்தொகை வழங்குவதற்காகத் தங்களது செலவுத் தொகைக் கோரிக்கைகளையும் அவற்றுக்கான ஆவணங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர். 

மாணவர்களின் விண்ணப்பங்கள் தற்போதும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  எனவே, இந்தச் செயல்முறையை அரசு விரைவுபடுத்தி, உதவித்தொகை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சமூக நீதி அரசு என்று கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், மாணவர்கள் இப்படி தான் தவிக்க விடுவதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

வலுக்கும் கண்டனம்

இந்த நிலையில், இதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?  உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI  மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? 

இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? திராவிட மாடல் அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே" என தெரிவித்தார். 

மேலும் படிக்க: செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES