அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக 9,646 கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கௌரவ விரிவுரையாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நடப்பு நவம்பர் மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உதிதவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை 2026ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாயை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மாணர்களின் கல்விச்சேவையைப் பாதிக்காத வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | https://t.co/kmLJ7cmYWo
— TN DIPR (@TNDIPRNEWS) November 13, 2026
தற்போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திரத் தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் தொய்வின்றித் தொடர தங்களின் பங்களிப்பினை வழங்கிவரும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாகவும்; அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் நவம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 8,741 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரிந்துவரும் 319 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 586 கௌரவ விரிவுரையாளர்கள் மொத்தம் 9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.