• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

பாகிஸ்தான் உளவாளி அனுப்பிய நிர்வாண புகைப்படங்களுக்கு ஈடாக இந்திய விமானப்படையின் போர் வியூகங்கள் மற்றும் டிரோன் ரகசியங்களை கசியவிட்ட விங் கமாண்டர் மீது டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Written BySudharsan G
Published: Nov 13, 2026, 10:44 PM IST|Updated: Nov 13, 2026, 10:50 PM IST
joinshare
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அவரது அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கிடமான ஸ்மார்ட்போன் ஒன்றை எடுத்துச் சென்றதாக இடைமறிக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்தப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

உளவாளியுடன் 5 மாதங்கள் தொடர்பு

அதில், கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதிவரை பாகிஸ்தான் உளவாளி ஒருவருடன் வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் பல ரகசிய தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டதையும் போலீசார் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் உளவாளி நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதற்கு ஈடாக, குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய விமானப் படை அதிகாரி பல ரகசிய தகவல்களை அவர்களிடம் கசியவிட்டதாக இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | கடும் கோபத்தில் சீக்கியர்கள்.. சோனியா காந்தியின் புத்தகம் எரிப்பு.. நடந்தது என்ன?

3,008 குறுஞ்செய்திகள்... 65 புகைப்படங்கள்...

இந்த விவகாரம் தொடர்பாக விமானப் படை அதிகாரிக்கும், பாகிஸ்தான் உளவாளிக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்களுக்கான டிஜிட்டல் ஆதாரங்களையும் டெல்லி காவல்துறை தனது குற்றப்பத்திரிகையுடன் இணைத்துள்ளது.

விமானப் படை அதிகாரியின் வாட்ஸ்அப் தகவல்களை ஆய்வு செய்ததில் இருவருக்கும் இடையே 3,008 குறுஞ்செய்திகள், 65 புகைப்படங்கள், 65 ரியாக்சன்கள், 42 ஆடியோ அழைப்புகள், 4 வீடியோ அழைப்புகள், 6 இணையதள இணைப்புகள் பரிமாறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி

இதுபோன்ற தகவல் கசிவுகள் நாட்டின் ராணுவ தயார்நிலையையும், பாதுகாப்பிற்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரி 5 மாதங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு போட்டோவுக்கு, ஒரு பக்கம்...

போலீசாரின் குற்றப்பத்திரிகையின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட அந்த விமானப்படை அதிகாரிக்கும் உளவாளிக்கும் இடையே ஒருவித புரிந்துணர்வு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வெங்காயம் 116%, பூண்டு 61% விலை உயர்வு.. ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை! எல்லையைத் தாண்டிய பணவீக்கம்

அதாவது, உளவாளி அனுப்பும் ஒரு நிர்வாண புகைப்படத்திற்கு ஈடாக போர் வியூக ஆவணத்தின் ஒரு பக்கத்தை அனுப்பவதை விமானப் படை அதிகாரி வழக்கமாக வைத்துள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர். முதலில் உளவாளி நிர்வாண புகைப்படத்தை அனுப்ப, பதிலுக்கு இவரும் ரகசிய ஆவணங்களின் பக்கத்தை புகைப்படமாக எடுத்து அனுப்பி உள்ளார்.

கசியவிட்ட தகவல்கள் என்னென்ன?

குற்றஞ்சாட்டப்பட்டவர் விமானப்படையின் ரகசிய ராணுவ தந்திரங்கள், டிரோன்களின் திறன்கள், போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டது, ராணுவப் பயிற்சிகள், முக்கிய ராணுவ தளங்களின் இருப்பிடங்கள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் உளவாளிகளிடம் கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரகசிய இந்திய விமானப் படை டிரோன் பிரிவின் பலம், அமைப்பின் கட்டமைப்பு, செயல்பாட்டு நடைமுறைகள், டிரோன் சோதனைகள், அவற்றின் செயல்பாட்டுத் திறன்கள், அவற்றின் பறக்கும் நேரம், ஆயுதல் இலக்கு அமைப்புகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை குற்றஞ்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவாளிக்கு அனுப்பி உள்ளார்.

போர் போன்ற பதற்றமான சூழல் ஏற்படும்போது, இந்த டிரோன் பிரிவை நிலைநிறுத்துவதற்கான சாத்தியமான இடங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவர் கசியவிட்டுள்ளார் என்றும் இது ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை, வியூகம் குறித்த விளக்கத்தை அளிப்பதால், இவரை எதிரிக்கு மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், லே பகுதியில் போர் விமானங்களை நிலைநிறுத்துவது குறித்த விவரங்களையும் விங் கமாண்டர் பகிர்ந்துகொண்டதாகவும், ராஜஸ்தானின் சூரத்கரில் உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் நடைபெற்ற ஒரு ராணுவ பயிற்சி குறித்தும் அவர் தகவல் கசியவிட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற அதிகாரிகளின் மொபைல்களிலும்...

இந்த வழக்கில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக, பாகிஸ்தான் உளவாளி ஒருவர், குற்றஞ்சாட்டப்படும் விமானப்படை அதிகாரிக்கு Malware, Spyware கொண்ட பல்வேறு செயலிகள், இணையதள இணைப்புகளை அனுப்பி உள்ளார். இவற்றின் மூலம் அவரது செல்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் சேமிக்கப்பட்டிருந்த ரகசியத் தகவல்களை அணுகியிருக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி தனது கீழ் பணியாற்றிய 5 அதிகாரிகளின் மின்னணு சாதனங்களிலும் குறிப்பிட்ட Malware, Spyware மென்பொருள்களை நிறுவுவதற்கு உதவியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எவ்வளவு முக்கியமான ரகசியத் தகவல்களை பகிர்ந்துள்ளார் என்பதையும், இந்தச் சதித் திட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

Add Zee News as a Preferred Source
TAGS:
India