SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவை வேலைவாய்ப்பு : யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Coimbatore Jobs : கோயம்புத்தூர் ATMA திட்டப் பணியிடங்களை நிரப்ப ஆள்தேர்வு முகமைகளிடமிருந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Aug 22, 2026, 08:29 PM IST | Updated: Aug 22, 2026, 08:31 PM IST
Join

Coimbatore Jobs : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியத் திட்டமான வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கும் நோக்கில், காலியாக உள்ள களப் பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை வேளாண்மை இயக்குநரின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளின்படி, கோவை மாவட்ட ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகிய பதவிகள் தகுதியான பணி நியமன முகமை மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை வட்டார அளவில் கொண்டு சேர்க்கும் பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்தகைய ஆள்தேர்வுப் பணிகளில் போதிய அனுபவமும் நம்பகத்தன்மையும் கொண்ட திறமையான பணி நியமன முகமைகளிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி நியமன முகமைகள் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:

விண்ணப்பிக்கும் பணி நியமன முகமைகள் தங்களது விண்ணப்பக் கடிதத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்கள் மற்றும் தகுதிச் சான்றுகளை முழுமையாக இணைத்து அனுப்ப வேண்டும்:

மனிதவள நியமனம் மற்றும் தொடர்புடைய பணிகளில் முகமைக்கு உள்ள முந்தைய பணி அனுபவச் சான்றுகள்.

இச்சேவையை வழங்குவதற்காக முகமையால் கோரப்படும் சேவைக் கட்டண விவரங்கள்.

அரசு விதிகளின்படி முகமை பெற்றுள்ள முறையான நிறுவனப் பதிவு எண்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:

தகுதியும் ஆர்வமும் கொண்ட முகமைகள் தங்களது முழுமையான விவரங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளி அடங்கிய படிவங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

திட்ட அலுவலர், வேளாண்மை இணை இயக்குநர்,
தடாகம் ரோடு, ஜி.சி.டி. அஞ்சல்,
கோயம்புத்தூர் - 641 013.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.08.2026

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகுதியான ஆவணங்களுடன் முகமைகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். வேளாண் திட்டங்கள் தடையின்றி கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆள்தேர்வு நடைமுறைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES