SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை.. கோயில் விழாவில் நடந்த சம்பவம்.. என்ன காரணம்?

Thoothukudi College Student Murder: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written By Umabarkavi K
Published: Oct 26, 2026, 01:40 PM IST | Updated: Oct 26, 2026, 02:03 PM IST
Join

Thoothukudi College Student Murder: தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,  தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி  மாணவர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை முடிந்த பின்னர், ஊரைச் சேர்ந்த பலர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மாரியப்பன் தரப்பினருக்கும் சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

மேலும் படிக்க: Explained: ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் மாயம்.. தவறவிடும் தமிழக காவல்துறை.. என்ன பிரச்னை?

வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினரும் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் மாரியப்பனின் மகன் இசக்கிராஜா (20) உயிரிழந்தார். இசக்கிராஜா ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

என்ன காரணம்?

இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், மாரியப்பன் தரப்பைச் சேர்ந்த நான்கு பேர் மீதும், எதிர்தரப்பைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆழ்வார்கற்குளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: அர்னாப் புயல் தீவிரம்: 125 கி.மீ. வேக காற்று, 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் -யாருக்கு பாதிப்பு?

திமுக கண்டனம்

இது தொர்பாக திமுக எம்பி  கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது. சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்" என கூறினார்.

மேலும் படிக்க: கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES