போபாலை சேர்ந்த ஒருவர், தன் வாயில் குட்கா போட்டு மென்று, அதை 3வது மாடியிலிருந்து துப்பியிருக்கிறார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்துள்ளார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
போபாலை சேர்ந்த 65 வயது நபர்தான், பிரபுலால் குப்தா. இவர், விதிஷா எனும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்துள்ளார். இந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இவர், கடந்த 10 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வந்துள்ளார்.
பிரபுலால் குப்தா, சமீபத்தில் தன்னுடைய வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அங்கு, மதியம் ஒரு மணியளவில் அவர் குட்காவை மென்று, மேலே இருந்து துப்பியிருக்கிறார். அவர் துப்பிய எச்சில், அங்கு சென்ற 11K Wire மீது பட்டதால், அவர் அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம், இது குறித்து கேள்வி படுவோர் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி, குட்கா துப்பும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து, வல்லுநர்கள் பேசி வருகின்றனர். அவர்கள், இது போன்ற விஷயம் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடும் என்று கூறி வருகின்றனர்.
மேலும், உமிழ்நீரில் ஈரப்பதமும் கரைந்த உப்புகளும் உள்ளதாகவும் அவை அதனை மின்கடத்தும் தன்மையுடையதாக மாற்றக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றனர். தொடர்ச்சியாகப் பாயும் எச்சில், மின்சாரம் பாயும் ஒரு கடத்தியை அடைந்தால், அது மின்சாரம் பாய்வதற்கான ஒரு கடத்தும் பாதையை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகின்றனர்.
11kV லைன், ஒரு சில சூழ்நிலைகளில் மின்சார வில்லை உருவாக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அந்த நபர் நின்றுக்கொண்டிருந்த பால்கனி, அந்த வயருக்கு மிக அருகில் இருந்திருந்தாலும், காற்றின் மூலமாகவும் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்றும் கூறி இருக்கின்றனர். இது உடல் முழுக்க பரவினால், அது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழக்க காரணமாகி இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிரபுலால் குப்தாவின் அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தால் கடும் கோபமாகி இருக்கின்றனர். இப்படி ஷாக் அடிப்பது குறித்து, குடியிருப்புவாசிகள் பல முறை புகார் கொடுத்து விட்டதாகவும், தங்கள் வீட்டுக்கு அருகிலேயே இவ்வளவு சக்தி வாய்ந்த மின்சார வயர்கள் செல்வதை பற்றி அதிகாரிகள் கவனித்துக்கொள்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
குப்தாவின் வீட்டருகில் இருக்கும் ஒரு நபர், இங்கிருக்கும் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள், மின்கம்பிகள் உள்ளிட்டவை பழுதடைந்து இருப்பதாகவும், இந்த 11K வயர் குறித்து எத்தனையோ முறை புகார் கொடுத்தும், பயனில்லாமல், இப்போது ஒரு உயிரே போயிருப்பதாக கூறி இருக்கின்றனர்.
இதன் பிறகு புகார் கொடுக்கையிலும், அதிகாரிகள் பலர் இது குறித்து நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
11kV Wire என்றால், 11,000 வோல்ட் மின்சாரம் பாயும் வயர்கள் என அர்த்தம். 11 கிலோ வோல்ட் மின் கம்பி அல்லது உயர் மின்னழுத்த மின் கம்பி என்றும் இதனை குறிப்பிடுவர். இதனால், அதனுடன் நேரடி தொடர்பு கொள்வது ஆபத்தான ஒன்று. இந்த மின் இணைப்புகள் பொதுவாக மின் கம்பங்களில் உயரமாகப் பொருத்தப்படுகின்றன அல்லது கனமான, காப்பிடப்பட்ட நிலத்தடி கேபிள்களாகப் பதிக்கப்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.