• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /செஞ்சி சிறுமி மாயம்: திமுக ஆட்சியில் இது வெளியிலேயே வந்திருக்காது... அமைச்சர் சிடிஆர்

செஞ்சி சிறுமி மாயம்: திமுக ஆட்சியில் இது வெளியிலேயே வந்திருக்காது... அமைச்சர் சிடிஆர்

திமுக ஆட்சியில் சிறுமி காணாமல் போகும் சம்பவம் நடந்தால் அதை வெளியில் வராமல் தடுத்திருப்பார்கள் என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்

Written BySudharsan G
Published: Oct 26, 2026, 02:46 PM IST|Updated: Oct 26, 2026, 02:52 PM IST
joinshare
செஞ்சி சிறுமி மாயம்: திமுக ஆட்சியில் இது வெளியிலேயே வந்திருக்காது... அமைச்சர் சிடிஆர்
Image Credit: Senji Girl Hemalatha Missing (Left), Minister CTR Nirmal Kumar (Right) | Image Source: X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
விஜய் vs தனுஷ்: தேவர் குருபூஜையில் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்!

விஜய் vs தனுஷ்: தேவர் குருபூஜையில் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்!

2

செஞ்சி சிறுமி மாயம்: திமுக ஆட்சியில் இது வெளியிலேயே வந்திருக்காது... அமைச்சர் சிடிஆர்

3

குட்கா போட்டு துப்பிய நபர்..மின்சாரம் பாய்ந்து பலி! 11kV Wire-ஆல் வந்த ஆபத்து..

4

ZEE என்டர்டெயின்மென்ட் மிகப்பெரிய மாற்றம்! 40 ஆண்டு அனுபவம்..யார் இந்த கோமல் நஹ்தா?

5

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விடுதலை! 8 ஆண்டு நீண்ட வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Senji Minor Girl Missing Case Latest Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்கும் மையங்களின் செயல்பாட்டை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (அக். 26) சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "பழுது ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று சரிசெய்ய 80 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் வாகனங்கள் வழங்கப்படும். உயர் அழுத்த HD line மின்கம்பி வழித்தடங்களையும் சரிசெய்ய பணியாளர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மண்சரிவு குறித்தும் , மீட்பு பணி நிறைவுற்று மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. எல்லா மாநிலங்களும் 5 ஆயிரம், 6 ஆயிரம் மெகாவாட் தான் சொந்த உற்பத்தியாக உள்ளது.

மேலும் படிக்க | கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மத்திய அரசின் தவறால் மின்வெட்டு

இந்தியா முழுவதும் மாநிலங்கள் தனியாரிடம் மின்சாரம் வாங்குகின்றனர். தனியாரிடம் மின் கொள்முதலை மேற்பார்வையிடுவது மத்திய அரசுதான். 40 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் இந்தியா முழுவதும் மின்சார பற்றாக்குறை இருக்கிறது. பல மாநிலங்களில் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மேல் கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளனர்.

மின்பற்றாக்குறை ஏற்படுவது குறித்து மத்திய அரசு முறையாக எச்சரிக்கவில்லை. தேசிய அளவில் ஏற்படும் மின்பற்றாக்குறையை முன்னறிவிப்பு செய்வது மத்திய அரசுதான். அவர்கள் தவறியதால் பெரும்பாலான மாநிலங்களுக்கு செலவினம் அதிகரித்து, மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சோலார் மின் உற்பத்தி

சோலார் மின் உற்பத்திக்கு புதிதாக அனுமதி வழங்காதது ஏன்...? சோலார் மின்சாரத்தை இதற்கு மேல் சேமிக்கக் கூடிய அளவு கட்டமைப்புகள் இல்லை. கூடுதலாக உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

ராஜஸ்தானில் கூடுதலாக சோலர் மின் உற்பத்திக்கு அனுமதி கொடுத்ததால் அதிக மின் உற்பத்தியால் பாதிப்பு ஏற்பட்டது. ஓரிரு நாட்களில் சோலார் மின் உற்பத்திக்கு புதிய அனுமதி வழங்கப்படும்" என்றார்.

மேலும் படிக்க | Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

திமுக ஆட்சியாக இருந்திருந்தால்...

தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து ஸ்டாலின் அறிக்கை குறித்தும், செஞ்சி சிறுமி மாயமானது குறித்தும் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்தார். அப்போது, "யாராவது எழுதிக் கொடுத்ததை ஸ்டாலின் அறிக்கையாக கொடுக்கிறார். செஞ்சி சிறுமி மாயமானது குறித்து 10 நாட்களாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கையே கண்டறிய முடியவில்லை. திமுக ஆட்சியில் சிறுமி காணாமல் போகும் சம்பவம் நடந்தால் அதை வெளியில் வராமல் தடுத்திருப்பார்கள்.

வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய திமுக

கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்தை வைத்து தனியார் பள்ளிகளிடம் கொள்ளை அடித்த ஆட்சி, திமுக ஆட்சி. வீரமணி வழக்கிலும் கட்டப்பஞ்சாயத்து நடத்தி சம்பாதித்தது திமுக. ஸ்டாலினுக்கு தெரியாமல் பணம் வாங்கி இருக்க மாட்டார்கள். வீரமணி வழக்கில் வீடியோ வைத்து பேரம் பேசி பணம் வாங்கி உள்ளார்கள்.

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என எனக்கு தெரியவில்லை. மீண்டும் அதை மறு விசாரணைக்கு உட்படுத்துவது நடைமுறை சாத்தியமா என தெரியவில்லை" என்றார்.

ராமஜெயம் கொலை வழக்கு

கே.என். நேருவின் இளைய சகோதரரான கே.என். ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று திருச்சி தில்லைநகர் பகுதியில் காலை நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபோது  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தது.

ஆரம்பத்தில் வழக்கை திருச்சி போலீசார் மற்றும் சிபிசிஐடி விசாரித்த நிலையில், குடும்பத்தார் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2017ஆம் ஆண்டில், அதாவது சுமார் 5 ஆண்டுகள் கழித்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022ஆம் ஆண்டில்  உயர் நீதிமன்ற அறிவிப்பின்படி சிறப்பு விசாரணைக்குக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்படாதது குறிப்பிடத்தக்கது.

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு அப்டேட்

செஞ்சி சிறுமி மாயமாகி 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கில் இன்று சந்தேகத்தின் பேரில் பரதன்தாங்களைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரையிடம் சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை.. கோயில் விழாவில் நடந்த சம்பவம்.. என்ன காரணம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu