SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்! இதில் பயன்பெறுவோர் யார்?

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர் இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என மலேசியாவில் பயின்று ஒவரும் ஒரு மாணவர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது அதிர்ச்சியளித்திருக்கிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 20, 2026, 06:12 PM IST | Updated: Aug 21, 2026, 04:33 PM IST
Join

வெளிநாடுகளில் முதுகலைப்பட்டம் மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்பதற்காக ரூ.36 லட்சம் கல்வித்தொகையை, தமிழ்நாடு அரசு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், முக்கிய கவனத்தை பெற்ற திட்டம்தான், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்.

மாணவரின் குற்றச்சாட்டு என்ன?
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிதி வழங்குவதில் தாமதம் செய்வதாகவும், இதனால் தங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து சமீபத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த ஒரு மாணவர், தன் தரப்பிலிருந்து தன்னுடைய செலவீனங்களுக்கான பில்களை எல்லாம் கொடுத்து விட்டதாகவும், இந்த வருடத்திற்குறிய உதவித்தொகையை கேட்ட போது, மீண்டும் பில் கொடுங்கள் என தன்னிடம் கேட்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், “உங்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது” என அமைச்சர் வன்னி அரசு குறித்து பேசியிருக்கிறார்.

வன்னி அரசு பதில்!

மாணவரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். திமுக சார்பில் எம் எல் ஏ கோவி செழியன் பேசினார். அப்போது, மாணவரின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார். இதற்கு வன்னி அரசு பதிலளித்தார். அப்போது, மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48.22 லட்சம் வழங்கப்பட்டதாகவும், நடப்பு ஆண்டில் உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார் என்றும் கூறினார். மேலும், முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்துக்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மாணவர் தரப்பில், அமைச்சர் வன்னி அரசு கூறுவது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு என கூறப்பட, வன்னி அரசு தரப்பில் மாணவர் இன்னும் செலவீனங்களுக்கான சான்றுகளை அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட விதிகள் என்ன?

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்தான், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம். இதில் பயன் பெறுவோர், மேற்குறிப்பிட்ட அந்த சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.

அதே சமயத்தில், விண்ணப்பத்தாரர், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராகவும் இருக்க வேண்டும். அயல்நாட்டில், கலை, அறிவியல், சட்டம், வணிகம், மருத்துவம், பொறியியல், வேளான்மை உள்ளிட்ட துறைகளில் முதுகலைப்பட்டம் (PG) அல்லது முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் 60% அல்லது அதற்கும் மேற்பட்ட மதிபெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்து, வெளிநாட்டில் முதுகலை படிப்பு அல்லது முனைவர் ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அதே சமயத்தில், மாணவ மாணவிகள் சேர விரும்பும் பல்கலைக்கழகம், உலகத்தர வரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் இருக்க வேண்டியதும் கட்டாயம்.

வெளிநாட்டில் முதுகலைப்பட்டம் படிக்க விரும்புபவரின் வயது 35க்குள் இருக்க வேண்டும். அதே போல, முனைவர் பட்டம் படிக்க விரும்புவோருக்கு வயது 40க்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒருவரால் மட்டுமே பயன்பெற இயலும்.

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை விரும்பும் மாணவ மாணவிகளின் குடும்ப வருமானம், ஆண்டிற்கு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.36 லட்சமும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மிகாமலும் இருந்தால், அதிகபட்சமாக ஓராண்டிற்கு ரூ.24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

ரூ.131 கோடி..

வன்னி அரசு, சட்டப்பேரவையில் பேசிய போது திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஆனால் தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

திட்டம் தொடங்கப்பட்டது எப்போது?

தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், 2003ஆம் ஆண்டு முதலாக நடைமுறையில் இருக்கிறாது. இதன் கீழ், தகுதியுடைய மாணவர்கள் உலகின் தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் படிக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்தான் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகளும் அந்த துறை முலமாகவேஎ வெளியிடப்படுகிறது.

விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள், https://tnadwscholarship.in/ என்கிற இணையதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி, செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சேர்ந்து நேரடியாக ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கபடும் முன்பு, மாவட்ட மற்றும் மாநில அளவில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பின்னர் பல்கலைக்கழக தரவரிசை, கல்வித்தகுதி மற்றும் பாடத்தின் பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதித்தேர்வு நடைபெறும். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES