• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அக்வான் புயல்: காத்திருக்கும் சம்பவம்.. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

அக்வான் புயல்: காத்திருக்கும் சம்பவம்.. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Akvan Cyclone Rain Alert Tamil Nadu: வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று நவம்பர் 20ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் ஆந்திராவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 18, 2026, 08:17 IST|Updated: Nov 18, 2026, 08:23 IST
joinshare
அக்வான் புயல்: காத்திருக்கும் சம்பவம்.. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்போது வேகமாக நகர்ந்து வருகிறது. மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் இந்தப் புயல், அடுத்த இரண்டு நாட்களில் மிகத் தீவிரப் புயலாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அக்வான் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 630 முதல் 650 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 760 முதல் 780 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் வங்கக்கடலில் உருவான மூன்றாவது புயல் இதுவாகும். ஏற்கெனவே அக்டோபர் இறுதியில் அர்னாப் புயலும், நவம்பர் தொடக்கத்தில் முரசு புயலும் உருவாகி கடலோரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அக்வான் புயல் எப்போது கரையை கடக்கும்?

அக்வான் புயல், இன்று (நவம்பர் 18) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இது, நாளை (நவம்பர் 19) மாலை மிகத் தீவிரப் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் நேரத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே, யானம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் அதன் வேகம் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சேதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்

அக்வான் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மற்ற பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், நவம்பர் 21ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

அக்வான் புயல் கரையை கடக்கவுள்ள ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காக்கிநாடா, கோனசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலூர், கிருஷ்ணா மற்றும் பாபட்லா ஆகிய 7 கடலோர மாவட்டங்களுக்கு நவம்பர் 19ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான அதிதீவிர மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலில் இயல்பான அளவைவிட 1 முதல் 2 மீட்டர் வரை உயரமாக அலைகள் எழும் வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான கடலோரக் கிராமங்களுக்குள் கடல் நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

அக்வான் புயலின் தாக்கம் ஒடிசா மாநிலத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சம், கஜபதி, பூரி மற்றும் ராயகடா உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 55க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 74 மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைப் பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்ப்பது அவசியம். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழை மற்றும் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மழை பெய்யும் நேரங்களில் அறுந்து விழுந்த மின்சார கம்பிகளை தொடக்கூடாது. மரங்களின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் கனமழை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து தெரிந்துகொண்டு அதற்கேற்ப பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather