SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வங்கக்கடலில் உருவாகும் 'அர்னாப்' புயுல்! தமிழகத்திற்கு ஆபத்தா? வெதர்மேன் அலர்ட்

Cyclone Arnab: வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகக் கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் உருவாகும் முதல் புயலாக கருதப்படுகிறது. அர்னாப் புயலால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 22, 2026, 09:51 IST | Updated: Sep 22, 2026, 10:07 IST
Join

Cyclone Arnab: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் இந்தாண்டின்  முதல் உருவாக உள்ளது. இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகும் 'அர்னாப்’ புயல்

செப்டம்பர் 20ஆம் தேதி மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி நேற்று (செப்.21) காலை 5.30 மணி அளவில்  ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மத்தியகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்தது. நேற்று காலை 8.30 அளவில்  மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரதெற்கு ஒடிசா கடலோர பகுதிகளை 23 ஆம் தேதி காலையில் சென்றடையக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் படிக்க: சென்னைக்கு வரும் ஸ்டார்பக்ஸ், கையெழுத்தான MoU: 'தமிழகத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி' முதல்வர் விஜய் பெருமிதம்

புயலின் இன்றைய நிலவரம்

இதுகுறித்து டெல்டா வெதர்மேன் கூறுகையில், "வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தகுதி செப்டம்பர் 23ஆம் தேதி வாக்கில் புயலாக உருவாகக் கூடும். வங்கக்கடலில் புயலாக உருவாகும் பட்சத்தில், இப்புயலுக்கு அர்னாப் என பெயர் சூடப்படும். இந்த பெயரை வங்கதேச அரசு பரிந்துரைத்துள்ளது. கடந்த 165 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில்  உருவாகும் 47 வது புயல். 

செப்டம்பரில் கடந்த 25 ஆண்டுகளில் உருவாகும் 4 வது புயல்.செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாவது மிகவும் அரிதான விஷயமாகும். அதிலும், தமிழகத்தை நோக்கி புயல் வருவது மிகவும் அரிதானது. அதே நேரத்தில், தமிழகத்தை நோக்கி இந்த புயல் வருவது மிகவும் குறைவு. தமிழக பகுதிகளுக்கு இந்த புயல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், இந்த அர்னாப் புயலால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறினார். 

டெல்டா வெதர்மேன் இன்று தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த   தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.  

அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெற சாதக சூழல் காணப்படுகிறது. ஆந்திரா-ஒடிசா நோக்கி நகரும் புயல் சின்னம். புயல் சின்னம் தொடர்ந்து வலுபெற்று வடக்கு ஆந்திர விசாகப்பட்டினம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் இடையே நாளை (23.09.2026) காலை கரையை கடக்கும் என எதிர்ப்பார்ப்பு. 

புயலால் தமிழ்நாட்டில் எந்த நேரடி தாக்கமும் இல்லை. கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது. தாழ்வு மண்டலம் வலுபெற்றால் இந்தாண்டின் முதல் புயலாக உருவெடுக்கும். புயலாக வலுபெற்றால் வங்கதேசம் பரிந்துரைத்த அர்ணாப் என்று பெயரிடப்படும்" என்று கூறினார்.

மேலும் படிக்க: நடுநிலை பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட CM விஜய்!
 

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட  அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 23ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES