SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பருப்பு கொள்முதல் விலையை குறைத்ததா தவெக அரசு? திமுக சுடச்சுட பதிலடி

நியாவிலைக் கடைகளுக்கான பருப்பு கொள்முதல் விலையை தவெக அரசு குறைத்தாக பரப்பப்படும் தகவலுக்கு, திமுக ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளது. கடந்த ஆட்சியில் கொள்முதல் விலையை இப்போது வெளியிடப்பட்டும் உள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 05, 2026, 02:47 PM IST | Updated: Oct 05, 2026, 02:58 PM IST
Join

நியாயவிலைக் கடைகளுக்கான பருப்பு கொள்முதல் விலையை திமுக அரசைக் காட்டிலும் 30 ரூபாய் வரை குறைத்து தவெக அரசு கொள்முதல் செய்திருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை எழுதியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, கடந்த ஆட்சியில் துவரம் பருப்பு கொள்முதல் செய்த விலையை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

சக்கரபாணி விளக்கம்

 

திமுக ஆட்சியில் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த சக்கரபாணி கொடுத்துள்ள விளக்கத்தில், "திமுக அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்?

எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?, இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா?, துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா?, துறையின் அமைச்சர், தவெகவில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிலடி

ஐயன் கார்த்திகேயன் கேள்வி

கடந்த ஆட்சியில் உண்மை சரிபார்ப்பு குழுவின் மிஷன் இயக்குநராக பணியாற்றிய ஐயன் கார்த்திகேயன் எழுதியுள்ள எக்ஸ் பதிவில், " பருப்புல என்னய்யா உருட்டு !, திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு  வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக்.

ஆனா உண்மை என்ன ?

1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி)  ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது.

3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை  ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது.

5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை.

தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை.

அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது.

இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் கொள்முதல் விலை

 

திமுக அரசு மற்றும் அதன் கொள்முதல் நடைமுறைகள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புவது முற்றிலும் தவறானது. ஒன்றிய நுகர்வோர் விவகாரத் துறை தரவுகளின்படி, மே மாதத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பின் சராசரி சில்லறை விலை ரூ.122.80 ஆக இருந்தது, செப்டம்பரில் அது ரூ.124.82 என அதிகரித்தது. இப்படி வெளிச்சந்தையில் விலை அதிகமாக இருந்தபோது, கிலோ ரூ.77.89-க்குக் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறுவது அசல் துவரம் பருப்பாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக, விலை மலிவான இறக்குமதி மஞ்சள் பருப்பு அல்லது கலப்புப் பருப்பாகவே இருக்க முடியும்.

பொதுவாகவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விதிமுறைகளின்படி, உயர்தர உள்நாட்டுத் துவரம் பருப்பிற்குப் பதிலாக, கிலோ Rs.60 முதல் Rs.80 வரை மட்டுமே விற்கும் கனடா நாட்டு மஞ்சள் பருப்பை சப்ளை செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி உண்டு. இவ்வாறு தரமான பொருளுக்குப் பதிலாக மலிவான மாற்றுப் பருப்பை வழங்கிவிட்டு, செலவைக் குறைத்துக் காட்டுவதை "நிர்வாகத் திறமையால் கிடைத்த மிச்சம்" என்று சொல்ல முடியாது. அது தரத்தைக் குறைக்கும் செயலாகும்.

சந்தை நிலவரமும் அரசு கொள்முதல் விதிகளும் தெரியாமல் விலைகளை ஒப்பிட்டுப் பேசுவது மக்களைத் திசைதிருப்பும் செயலாகும். அடிப்படை வர்த்தகத்தைப் புரிந்து கொள்ளாமல், "கிலோவுக்கு Rs.31 மிச்சப்படுத்திவிட்டோம்" என்று வாதிடுவது முற்றிலும் தவறானது என திமுகவினர், கொள்முதல் ஆதாரங்களை வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES