• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்

கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்

திண்டுக்கல்லை சேர்ந்த மூதாட்டி ஒருவர், கார்த்திகை தீபத்தின் போது தீபத்தால் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 25, 2026, 13:56 IST|Updated: Nov 25, 2026, 14:11 IST
joinshare
கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்
Image Credit: Karthigai Deepam Accident In Dindigul | Source : Social Media Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்

கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்

2

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்றப்படுமா...? உச்ச நீதிமன்றம் முக்கிய விசாரணை

3

குரு பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு புத்தாண்டின் தொடக்கமே அட்டகாசம்!! ஜனவரி 24 முதல் ராஜயோகம்

4

ஆடம்பர வீட்டை அவசரமாக விற்கும் அனுஷ்கா! காரணம் என்ன? விரைவில் திருமணமா..?

5

புதுச்சேரி வானிலை அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

“Humans Are Social Animals" என்று யாரும் சும்மா சொல்லவில்லை. மனிதர்களுடன் பேசிப்பழகவோ, துணை நிற்கவோ யாரோ ஒருவர் தேவைதான். ஆனால், திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு மூதாட்டி, தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு நேர்ந்த நிலை ஒன்று குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர்.

தீப விளக்கால் பற்றிய தீ..!

தமிழ்நாட்டில், கடந்த 24ஆம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல்லில், வீட்டில் ஒரு மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அவர், திருக்கார்த்திகை திருநாளையொட்டி தீபம் ஏற்றியபோது, எதிர்பாராத விதமாக புடவையில் தீப்பற்றிக்கொண்டது. இதனால், உடல் முழுவதும் தீப்பரவி அவர் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியாக வசித்து வந்த மூதாட்டி..!

அந்த மூதாட்டியின் பெயர், மீனாட்சி. அவருக்கு 80 வயது ஆகிறது. இவருடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் மூதாட்டி மீனாட்சி திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு (நேற்று) அவர் இரவு நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீப்பற்றி இருக்கிறது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்றப்படுமா...? உச்ச நீதிமன்றம் முக்கிய விசாரணை

மூதாட்டி மீனாட்சி புடவையில் தீப்பற்றியபோது அதை அவரும் கவனிக்கவில்லை, சுற்றியிருந்த வேறு யாரும் கவனிக்கவில்லை. இதனால், தீப்பற்றிய பின்பு அவர் கத்தியதும் யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

பிரேதப்பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைப்பு..!

மூதாட்டி மீனாட்சி, தன் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவரை வைத்துள்ளார். அவர், புதன்கிழமையான இன்று காலை வழக்கம் போல வீட்டு வேலைக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள், மூதாட்டி மீனாட்சி உடல் கருகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவருடைய மகனுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

மீனாட்சியின் மகன் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டிக்கு இப்படி ஒரு நிலை நேர்ந்திருப்பது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் படிக்க | TN Power Cut: தமிழகத்தில் நாளை (நவ., 26) மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள்? முழு பட்டியல்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu