• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. என்னாச்சு?

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. என்னாச்சு?

DMK Mupperum Vizha Postponed: செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Written ByUmabarkavi K
Published: Sep 15, 2026, 10:39 AM IST|Updated: Sep 15, 2026, 10:56 AM IST
joinshare
ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. என்னாச்சு?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

DMK Mupperum Vizha Postponed:  ஒவ்வொரு செப்டம்பர் 15ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்டதை ஒன்றாக கொண்டாடும் விதமாக,  செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

அந்த வகையில், இன்று திமுக முப்பெரும் விழா நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை திமுக பணிகளை மேற்கொண்டு வந்ததது. இந்த நிலையில், திடீரென இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளததாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, கழகத் தலைவர் அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு

கழகத் தலைவர் அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

திரு. துரைமுருகன்… pic.twitter.com/33s5abmvxq

— DMK (@arivalayam) September 15, 2026

மேலும் படிக்க: Explained: திமுகவுக்கு தொடர்ந்து தலைவலியை தரும் ஆ.ராசா... 2021ல் நடந்த சம்பவம்!
 

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று டைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. வழக்கமாக முப்பெரும் விழாவின்போது, அண்ணா நினைவிடத்திற்கு நேரில் வந்து திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக செய்து வருகிறார். 

ஆனால்,  இன்று காலை அண்ணா நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சல் செலுத்தினர். ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வரவில்லை.

இதையடுத்து, அறிவாலயம் சார்பில் வெளியான தகவலின்படி, லேசான வைரல் காய்ச்சல் காரணமாகவே ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரவில்லை என கூறப்பட்டது. வைரல் காய்ச்சல் காரணமாக, ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. 

இதனால், அவர் இன்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரவில்லை. மேலும்,  ஸ்டாலினின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு: அக்டோபர் மாதத்திற்குள் இதை செஞ்சிடுங்க

திமுக முப்பெரும் விழா விருதுகள்

  • பெரியார் விருது - விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா
  • அண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே.சுபாஷ்
  • கலைஞர் விருது - திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக மாநிலங்களவை எம்பியுமான திருச்சி சிவா
  • பாவேந்தர் விருது - மருத்துவ அணி தலைவரும்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்விஎன் சோமு
  • பேராசிரியர் விருது -  தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ்.அகமது தம்பி
  • மு.க.ஸ்டாலின் விருது -  இளைஞரணி துணைச் செயலர் நா. இளையராஜா

இவர்களுக்கு இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில் தான், கடைசி நேரத்தில் திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
MK Stalin