SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கட்சிக்குள் குழப்பம்.. தொகுதி மறுவரையால் வந்த வினை.. திமுகவில் 2 விக்கெட் ஆவுட்டா?

DMK On Delimitation: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்தது தேசிய அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. இந்த முடிவிற்கு கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் திமுகவில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 29, 2026, 10:33 IST | Updated: Nov 29, 2026, 10:56 IST
Join

DMK On Delimitation: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாள (நவம்பர் 30) தொடங்கப்பட உள்ளது. மக்களவை கூட்டத்தொடர் நாளை தொடங்கி, டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்ற உள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு

திருத்தப்பட்ட மசோதாவிற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இந்த மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது. அப்படியிருக்க தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர்சிபி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்திருக்கும் நிலையில், இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நேற்று (நவ. 28) அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதை அடுத்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரின் இல்லத்தில் வைத்து, திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. ராசா, கலாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினர். தொகுதி மறுவரையறைக்கு திமுகு ஆதரவளித்து இருப்பது  தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் ஆதரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, ராகுல்... சென்னையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் - முடிவை மாற்றுமா திமுக?

கட்சிக்குள்ளே குழப்பம்

தொகுதி மறுவரையறை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது ஆதரவளித்து இருக்கிறது.  இந்த முடிவு திமுகவில் சீனியர் தலைவர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக, திமுக முன்னாள அமைச்சர் மனோ தங்கராஜ், திருச்சி சிவா எம்பி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.  

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கட்சிக்குள்ளே தொகுதி மறுவரையறையில் முரண்பாடு இருப்பது அப்பட்டசமாக தெரிகிறது.

விரைவில் மனோ தங்கராஜ் கட்சி மாறுதலா?

மனோ தங்கராஜ் தொகுதி மறுவரையறை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "தொகுதி மறுவரையறை மசோதாவால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50% மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று சொல்லி ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் மக்களவையில் முன்மொழிந்து நிறைவேற்றிடத் துடிக்கும் பாசிச பாஜக அரசின் செயல் வெட்கக்கேடானது.  பின்வாசல் வழியாக நுழைந்த மக்கள் பிரதிநிதிகளை வைத்து நிறைவேற்றிடலாம் என எண்ணுவது கோழைத்தனமானது.

மேலும் படிக்க; அமித்ஷா உடன் சந்திப்பு... காங்கிரஸை கதறவிட்ட கனிமொழி - பாஜக கூட்டணிக்கு நோ

பாஜக தற்போது கொண்டு வரக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவானது மாநிலங்களுக்கிடையேயான அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும் வகையிலானதாகும்.  விரும்பினால் வெகுமதி.. மறுத்தால் தண்டனை.. என்பது போன்ற அரசியலைக் கையில் வைத்துக்கொண்டு தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வட மாநிலங்களுக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நரித்தனத்திற்கு தென் மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது" என  காட்டமாக விமர்சித்தார்.  திமுகவின் முடிவுக்கு நேர் மாறாக அவர் கருத்து கூறியிருப்பது, விரைவில் மனோ தங்கராஜ் கட்சி மாற உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

திருச்சி சிவா அதிருப்தியா?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஆதரவு அளித்திருப்பது எம்பி திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கட்சி தலைமையிடம் தொடர்ந்து  திருச்சி சிவா வலியுறுத்தியதாகவும், ஆனால், திமுக தலைமையின் குடும்பம் இதை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில பரவி வருகிறது.  

சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவலுக்கு எம்பி திருச்சி சிவா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் திருச்சி சிவா கூறியிருப்பதாவது, "எனது பெயரைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இழிவான, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மன வருத்தத்தை அளிக்கின்றன. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது மட்டுமே உண்மை. 

ஆனால் சமூக வலைதளங்களில் சில பதிவுகள் எனது பெயரைப் பயன்படுத்தி விஷயங்கள் மிகைப்படுத்தி வருகின்றன. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரம் திமுகவில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் கவமும் திமுகவின் பக்கம் திரும்பி இருக்கிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES