SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

காஞ்சிபுரத்தில் இரட்டை கொலை.. கோயில் திருவிழாவில் ஷாக்.. நடந்தது என்ன?

Kancheepuram Double Murder: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் போடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written By Umabarkavi K
Published: Aug 17, 2026, 09:41 AM IST | Updated: Aug 17, 2026, 10:03 AM IST
Join

Kancheepuram Double Murder: தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்னை கேள்விகுறியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.  இதனை தடுக்க மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் இரட்டை கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லை பகுதியில் நேற்று அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது,  கானா பாடல் ஒலிபெருக்கில் போட வேண்டும் என சில வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

கானா பாடல் போட சொல்லி வந்தனர். அதனை கேட்காததால் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரிடையே பெரிய அளவில்  மோதல் ஏற்பட்டது.  இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி  அனுப்பியதாக தெரிகிறது. பின்னர், நள்ளிரவில் படுநெல்லியைச் சேர்ந்த 25 வயதான நீலகண்டனும், 24 வயதான சந்துருவும்  தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் அமர்ந்திருந்தனர்.

இளைஞர்கள் 2 பேருக்கு நேர்ந்த கொடூரம்

அப்போது, அடையாளம் தெரியாத  கும்பல் ஒன்று அங்கு வந்து, இரண்டு பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால், இவருக்கும் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனை சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரின் சடலங்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  மேலும்,  அப்பகுதியில் வன்முறை பரவி விடாமல் தவிர்க்க 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

ஆரம்பத்திலேயே மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலைகளை தடுத்திருக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர். இரட்டைக் கொலைக்கான நோக்கம் மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் அடையாளங்கள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES