ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் கங்கா மருத்துவமனை... CPR விழிப்புணர்வில் சாதனை
சர்வதேச ஒத்துழைப்புடன் மாபெரும் உயிர் காக்கும் விழிப்புணர்வை மேற்கொண்ட கங்கா மருத்துவமனை ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
சர்வதேச ஒத்துழைப்புடன் மாபெரும் உயிர் காக்கும் விழிப்புணர்வை சாத்தியபடுத்திய கங்கா மருத்துவமனை ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், AIIMS முன்னெடுப்பான நேஷன் ஆஃப் லைஃப்சேவர்ஸ் கொலாபரேட்டிவ் மற்றும் UYIR அமைப்புடன் இணைந்து இந்த CPR குறித்த விழிப்புணர்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதி சர்வதேச அளவில் World Restart a Heart Day அனுசரிக்கப்படுகிறது. திடீரென ஏற்படும் மாரடைப்பு அல்லது இதயத் தமனி முடக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்களை, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் இடையப்பட்ட நேரத்திற்குள் உடனடி CPR சிகிச்சை மூலம் எப்படி காப்பற்றுவது என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
கங்கா மருத்துவமனையின் எலும்பியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் காங்கா நர்சிங் கல்லூரி இணைந்து பிரம்மாண்ட CPR பயிற்சி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின.
காங்கா நர்சிங் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் அணி திரண்டர். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மனித பொம்மைகள் மூலம் சரியான அழுத்த விகிதத்துடன் கூடிய அதிநவீன CPR நுட்பங்களை இடைவிடாது செய்து காட்டி பயிறி பெற்றனர்.
இந்த விழிப்புணர்வு பணியின் ஒருங்கிணைப்பு, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் துல்லியமான பயிற்சி முறை ஆகியவற்றை பரிசீலித்த 'ஆசிய சாதனைப் புத்தகம்' நடுவர் குழு, இதை ஒரு புதிய ஆசிய சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.