SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜெம் வீரமணி வழக்கு.. சிறுமிகளை அழைத்துச் சென்ற ஓட்டுநர் பெருமாள் கைது!

Gem Veeramani Case: ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஓட்டுநர் பெருமாள் என்ற பாலாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Written By R Balaji
Published: Nov 16, 2026, 08:54 IST | Updated: Nov 16, 2026, 08:59 IST
Join

ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், அவருக்கு உதவியதாக கூறப்படும் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். சிறுமிகளை வீரமணியிடம் அழைத்து சென்றதாக கூறப்படும் ஒட்டுநர் பெருமாள் என்ற பாலா கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

ஜெம் வீரமணி மீது புதிதாக 9வது வழக்கு

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஜெம் வீரமணி மீது ஏற்கனவே எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மேலும் ஒரு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுமிகளை அழைத்து சென்ற ஓட்டுநர் கைது

புதிய வழக்கின் விசாரணையை தொடர்ந்து வீரமணியின் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ஓட்டுநர் பெருமாள் என்ற பாலாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் நவம்பர் 14 ஆம் தேதி கைது செய்தனர். சிறுமிகளை வீரமணியிடம் அழைத்து சென்றதாக கூறப்படும் அவர், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராயப்பேட்டை வீட்டில் போலீசார் சோதனை

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். வட்டாட்சியர் மற்றும் மயிலாப்பூர் நிர்வாக நடுவர் முன்னிலையில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வழக்குகள்.. இதுவரை 10 பேர் கைது

ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகளில் இதுவரை 13 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் மொத்தம் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக வீரமணி உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட ஒன்பது வழக்குகளில் ஒன்றில் கடந்த நவம்பர் 11 ஆம் தேதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. எஞ்சிய வழக்குகளில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES