SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வாகன ஓட்டிகளுக்கு செம குட் நியூஸ்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Central government PUC rules : வாகன ஓட்டிகளுக்கு செம குட் நியூஸ் என்னவென்றால் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை PUC சான்றிதழ் எடுத்தால் போதும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 20, 2026, 11:21 IST | Updated: Nov 20, 2026, 11:26 IST
Image Credit: Central government PUC rules
Join

Central government PUC rules : நாடு முழுவதும் உள்ள கார், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வாகனங்களின் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate - PUC) செல்லுபடியாகும் கால அளவில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 'மத்திய மோட்டார் வாகனங்கள் (16-வது திருத்த) விதிகள், 2026' இந்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

வாகனங்களின் தரத்திற்கு ஏற்ப மாறும் கால அளவு:

புதிய விதிமுறைகளின்படி, அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான கால அளவு இல்லாமல், அந்தந்த வாகனங்கள் எந்த மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறையின் கீழ் தயாரிக்கப்பட்டவை மற்றும் வாகனத்தின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் PUC சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  

பழைய வாகனங்களுக்கான விதிமுறைகள்:

BS-I, BS-II மற்றும் BS-III வாகனங்கள்: பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட BS-I, BS-II மற்றும் BS-III விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வழங்கப்படும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இனி 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.  

BS-IV வாகனங்கள்: BS-IV மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வழங்கப்படும் PUC சான்றிதழ் 6 மாதங்களுக்கு (Six months) செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

BS-VI சொந்தப் பயன்பாட்டு வாகனங்களுக்கு மிகப்பெரிய சலுகை:

தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்பம் கொண்ட BS-VI வாகனங்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. குறிப்பாக, சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களான கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் போன்றவற்றுக்குப் பின்வரும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:  

முதல் 6 ஆண்டுகள் வரை: வாகனம் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் வரை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே PUC சான்றிதழ் எடுத்தால் போதுமானது.  

6 முதல் 10 ஆண்டுகள் வரை: வாகனத்தின் வயது 6 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை இருந்தால், ஆண்டுக்கு ஒருமுறை PUC சான்றிதழ் பெற வேண்டும்.  

10 ஆண்டுகளுக்கு மேல்: வாகனம் பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், 6 மாதங்களுக்கு ஒருமுறை PUC சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும்.  

வாடகை மற்றும் சரக்கு வாகனங்களுக்கான விதிமுறைகள்:

வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு தனி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது:  

முதல் 6 ஆண்டுகள் வரை: வாகனம் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் வரை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை PUC சான்றிதழ் எடுத்தால் போதும்.  

6 முதல் 10 ஆண்டுகள் வரை: 6 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை PUC சான்றிதழ் எடுக்க வேண்டும்.  

10 ஆண்டுகளுக்கு மேல்: 10 ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை PUC சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

PUC சான்றிதழ் புதுப்பித்தலில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய விதிகள்:

சான்றிதழைப் புதுப்பிக்கும்போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க அரசிதழில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன:

காலாவதியாகும் முன் புதுப்பித்தல்: பழைய PUC சான்றிதழ் காலாவதியாவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே புதுப்பித்தால், புதிய சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் பழைய சான்றிதழ் முடிவடையும் நாளிலிருந்தே கணக்கிடப்பட்டு அமலுக்கு வரும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு மீதமுள்ள நாட்கள் வீணாகாது.  

காலாவதியான பின் புதுப்பித்தல்: சான்றிதழ் காலாவதியான பிறகு புதுப்பித்தால், எந்தத் தேதியில் புதுப்பிக்கப்படுகிறதோ அந்த நாளிலிருந்தே புதிய சான்றிதழ் அமலுக்கு வரும்.  

ஏற்கனவே சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு எப்போது பொருந்தும்?: மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகள், 2026 அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே PUC சான்றிதழ் பெற்றவர்களுக்கு, தற்போதுள்ள சான்றிதழ் முடிந்து அடுத்த முறை முதன்முதலாகப் புதுப்பிக்கும்போது இந்தப் புதிய கால அளவு சலுகைகள் பொருந்தும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.  

அடிக்கடி மாசு கட்டுப்பாட்டு மையங்களுக்குச் சென்று சான்றிதழ் புதுப்பிக்கும் சிரமத்தைக் குறைக்கும் மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை, கோடிக்கணக்கான BS-VI வாகன ஓட்டிகளுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES