• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

CM health insurance latest news : முதல்வர் காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத்துடன் இணைந்து புதிய நடைமுறையில் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 20, 2026, 08:33 IST|Updated: Nov 20, 2026, 08:34 IST
joinshare
முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
Image Credit: Tamil Nadu CM Health Insurance Scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM health insurance latest news : தமிழக மக்களின் உயிர் காக்கும் திட்டமாகத் திகழும் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' இன்னும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை சார்பில் 16.11.2026 தேதியிட்ட புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை 2-ஆம் கட்டப் பயனாளிகள் 50% நீக்கமா? தமிழக அரசு முக்கிய விளக்கம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைப்பு:

ஏற்கனவே கடந்த 10.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) திட்டத்துடன் ஒருங்கிணைத்து, வருகிற 11.01.2027 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக வெளிப்படையான டெண்டர் (Open-tender) முறையில் புதிய காப்பீடு நிறுவனத்தைத் தேர்வு செய்ய 'மாநில அதிகாரம் பெற்ற குழு' மற்றும் 'டெண்டர் பரிசீலனைக் குழு' அமைக்கவும் அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டிருந்தது.  

புதிய அரசாணையில் முக்கியத் திருத்தம்:

இந்நிலையில், தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குநர் கடந்த 07.10.2026 அன்று அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் (Ref.No.1020/TNHSP/Ins/2026) அடிப்படையில், தற்போது வெளியாகியுள்ள அரசாணை எண். 425ல் ஒரு முக்கியத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காப்பீடு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் 'மாநில அதிகாரம் பெற்ற குழுவில்' தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் (TNMSC) மேலாண்மை இயக்குநரையும் ஒரு உறுப்பினராகச் சேர்த்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

தலைமைச் செயலாளர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு:

இந்தப் புதிய திருத்தத்தின் மூலம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழிநடத்தும் மாநில அதிகாரம் பெற்ற குழுவில் தலைமைச் செயலாளர் தலைமையில் மொத்தம் 13 உயரதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

பொதுமக்களுக்கு என்ன பயன்?

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் பெரிய நோய்கள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்குத் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இத்திட்டம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்து செயல்படுவதால், மாநில மற்றும் மத்திய அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் ஒரே திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்குத் தடையின்றி கிடைக்கும்.  

மேலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் மிகுந்த அனுபவம் வாய்ந்த தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் (TNMSC) மேலாண்மை இயக்குநரும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டிருப்பது, காப்பீடு நிறுவனத் தேர்வில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும், திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டையும் உறுதி செய்யும். 11.01.2027 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே காப்பீட்டு அட்டை வைத்துள்ள குடும்பங்கள் தொடர்ந்து பயன்பெறலாம். புதிய காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைகளின் பட்டியல் குறித்த விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க  | ஆதார் இல்லாமலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கலாம்: யாருக்கெல்லாம் இந்த விலக்கு?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu