• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

Tiruvallur News: மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார், பொதுமக்களின் முற்றுகையைத் தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்து முன்பக்கம் வழியாகச் செல்லாமல் பின்பக்க வழியாக வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written BySudharsan G
Published: Nov 26, 2026, 15:20 IST|Updated: Nov 26, 2026, 15:37 IST
joinshare
பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ
Image Credit: Gummidipoondi TVK MLA Vijayakumar | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

2

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

3

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

4

ரூ.2.50 லட்சம் மானியத்தில் வீடு கட்ட விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு

5

பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு - தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tiruvallur District News Latest Updates: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம் ஏலாவூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் பகுதியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

மேலும் படிக்க | கைதாகிறாரா அருள் விக்னேஷ்? வீட்டில் தடுப்புகள் அமைப்பு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

பட்டா வழங்கவில்லை என மக்கள் ஆர்ப்பாட்டம்

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கோட்டாட்சியர் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் வருகை காரணமாக எம்எல்ஏ விஜயகுமார் திட்ட முகாமிற்கு பல மணிநேரம் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் கூட்ட அரங்கிற்குள் நுழைந்தபோதே, ஏற்கனவே பலமுறை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் தங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எம்எல்ஏ காரை மறித்து வாக்குவாதம்

இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சில பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய எம்எல்ஏ விஜயகுமாரை, மனுக்களை வழங்குவதற்காக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு முண்டியடித்துச் சென்றனர். இந்த முகாமே பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் எம்எல்ஏவை முன்பக்க வழியாக அழைத்துச் செல்லாமல், பின்பக்க வழியாக அழைத்துச் சென்று காரில் அனுப்பிவைத்தனர். இருப்பினும், கவரப்பேட்டை அடுத்த பண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்எல்ஏ சென்ற காரை வழிமறித்து, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தலைமைச் செயலாளர் மூடி மறைத்தது ஏன்? - உதயநிதி கேள்வி

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், காரை வழிமறித்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், பொதுமக்களின் முற்றுகையைத் தொடர்ந்து முன்பக்க வழியாகச் செல்லாமல் பின்பக்க வழியாக வெளியேறிய சம்பவம் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.

வராத எம்எல்ஏக்கள்... கார்த்தி சிதம்பரம் அதிருப்தி...

இதேபோல், சிவகங்கையில் நடைபெற்ற DISHA கூட்டத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாதது என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

It’s very disappointing that none of the@TVKVijayHQ MLAs attended the District Development Coordination & Monitoring Committee (DISHA) meeting in Sivaganga today. DISHA an institutional mechanism to review the various government departments & schemes, the entire district administration including the @SivagangaiDist Collector are part of DISHA meetings, elected representatives ignoring DISHA is an abdication of responsibility.

— Karti P Chidambaram (@KartiPC) November 26, 2026

இதுகுறித்து அவரது பதிவில், "சிவகங்கையில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

DISHA என்பது பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு நிறுவன அமைப்பாகும். மாவட்ட ஆட்சியர் உள்பட முழு மாவட்ட நிர்வாகமும் DISHA கூட்டங்களில் பங்கேற்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் DISHA கூட்டத்தைப் புறக்கணிப்பது தங்கள் பொறுப்பில் இருந்து தவறுவதாகும்" என குறிப்பிடுள்ளார்.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்கிறாரா? பரபரப்பு தகவல்

Add Zee News as a Preferred Source
TAGS:
TVK