SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மனைவியை அடித்தே கொன்று பின் நாடகமாடிய கணவன்: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்

Thanjavur Crime News: மகாதேவியைக் கொலை செய்த கணவர் ராமராஜன், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தாயார் வெண்ணிலா மற்றும் அண்ணன் முத்துராமன் (26) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 20, 2026, 03:07 PM IST | Updated: Aug 20, 2026, 03:18 PM IST
Join

Thanjavur News: தஞ்சாவூரில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, அது இயற்கையான மரணம் என்று நாடகமாடிய ஒருவரைப் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். அந்த நபர் வெளியிட்ட விவரங்கள் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

மகளின் மரணத்தில் தாய்க்கு வந்த சந்தேகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே உள்ள ஏலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜன் (25). இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த மகாதேவி (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுடையது காதல் திருமணம்.

செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் மகாதேவி எழுந்திருக்காததால், ராமராஜனின் தாயார் அவரைச் சென்று பார்த்தார். மகாதேவியை எழுப்ப முயற்சித்தும், அவர் எந்தப் பதிலும் அளிக்காததால், அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க | ஆசிட் குடித்த டீச்சர், உடலில் சிகரெட் சூடு காயம்: கொலையா, தற்கொலையா? மனதை உலுக்கும் கொடூரம்

அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மகாதேவியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலநலக் குறைவால் அவர் இறந்துவிட்டதாக ராமராஜன் குடும்பத்தினர் கூறிய நிலையில், மகாதேவியின் குடும்பம் அதை நம்பவில்லை. மகாதேவியின் திடீர் மரணம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மகாதேவியின் உறவினர்கள் அவர் தலையில் காயமிருப்பதைக்கண்டனர். சந்தேகம் காரணமாக அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மகாதேவியின் தலையில் காயங்கள் இருந்ததால், அவரது தாய் திருநீலக்குடி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் எனப் புகார் அளித்தார்.

இயல்புக்கு மாறான மரணம்

இதனையடுத்து திருநீலக்குடி போலீசார் 'இயல்புக்கு மாறான மரணம்' (unnatural death) என வழக்குப்பதிவு செய்தனர். பரிசோதனையில் மகாதேவிக்கு தலையில் பலத்த காயம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மேலும் படிக்க | பெண்ணை கொன்று சாக்குப்பையில் அடைத்த லிவ்-இன் பார்ட்னர்: ஹைதராபாதில் திகில் சம்பவம்

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

போலீசாரின் விசாரணையில், திங்கள்கிழமை கணவன் மனைவிக்கு இடையில் தீவிர வாக்குவாதம் நடைபெற்றதாக தெரியவந்தது. இரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் அவரை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாக மகாதேவியின் கணவன் ராமராஜன் ஒப்புக்கொண்டார். இதில் மகாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை இயற்கை மரணம் போல் காட்ட, ராமராஜன் மகாதேவியின் உயிரற்ற உடலை பாயில் படுக்க வைத்தார். அதன் பின் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து இயற்கையாக நடந்த மரணம் போல் நாடகம் ஆடியுள்ளார்.

போலீசார் நடவடிக்கை

காவல்துறை விசாரணையில் ராமராஜன் இவை அனைத்தையும் ஒப்புக்கொண்டார். மகாதேவியைக் கொலை செய்த கணவர் ராமராஜன், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தாயார் வெண்ணிலா மற்றும் அண்ணன் முத்துராமன் (26) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமான ஓராண்டிலேயே இளம்பெண்ணை அவரது கணவன் அடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோவையில் கொடூரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. 5 பேரிடம் போலிஸ் தீவிர விசாரணை!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES