SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, ராகுல்... சென்னையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் - முடிவை மாற்றுமா திமுக?

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

Written By Sudharsan G
Published: Nov 29, 2026, 10:40 IST | Updated: Nov 29, 2026, 10:46 IST
Image Credit: MK Stalin, Sonia Gandhi, Rahul Gandhi (Left to Right) | Image Source : X
Join

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் கபில் சிபில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரள முதலமைச்சர் சதீஷன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலினை சென்னையில் சந்தித்துவிட்டு, இந்தியா கூட்டணி தலைவர்கள் மும்பைக்குச் சென்று சரத் பவாரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் திமுகவின் 22 எம்.பி.க்கள், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8 எம்.பி.க்கள் என 30 பேரின் ஆதரவு இந்த மசோதா நிறைவேறுவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.

எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் ஸ்டாலின், சரத் பவாரை வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES