பாலிவுட் நடிகைக்கு அனுப்பிய 'அந்த' மெசேஜ்.. போட்டு கொடுத்த அதிகாரிகள்.. எல்.முருகன் ராஜினாமா பின்னணி!
L Murugan Resignation: மத்திய இணை அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்ததன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.முருகன் ராஜினாமாவிற்கு பாலிவுட் நடிகை புகார் கொடுத்ததன் காரணம் என ஆங்கில நாளேட்டில் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
L Murugan Resignation: மத்திய இணை அமைச்சர் பொறுப்பை எல்.முருகன் அக்டோபர் 13ஆம் தேதி ராஜினாமா செய்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். பிரதமர் மோடிக்கு எல்.முருகன் 5 பக்க கடிதத்தை எழுதியிருக்கிறார். அமைச்சரவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
எல்.முருகன் ராஜினாமா
பாஜக கட்சியின் மூத்த தலைவரான எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர், ஏபிவிபி அமைப்பில் இருந்துள்ளார். அதற்கு பிறகு, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும், 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக பதவி வகித்தார். 2020ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக நிமியக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு வரை மாநில தலைவர் பொறுப்பை வகித்தார்.
2021 சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் தோல்வியை அவர் சந்தித்தார். இதனால், பாஜக மேலிடம் இவர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு, 2021ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும பால்வளத்துறை இலாக்களை வகித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மீண்டும் தோல்வியை சந்தித்தார்.
2030 வரை பதவிக்காலம்
கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய பிரசேத மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியானார். இந்த பதவி இரண்டரை ஆண்டுகளில் முடிந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது முறையில் அம்மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வானார். இந்த பதவிக்காலம் 2030 ஏப்ரல் 2ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், திடீரென அவர் விலகியது பல கேள்விகளை எழுப்பி இருந்தது.
தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த எல்.முருகன், அக்டோபர் 13ஆம் தேதி ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். எல்.முருகன் திடீரென ராஜினாமா செய்வதற்கு காரணம் என்ன என்பது குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், எல்.முருகன் ராஜினாமா குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று ஆங்கில நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகைக்கு அனுப்பிய மெசேஜ்?
கடந்த வாரம் மத்திய அமைச்சர் எல். முருகனின் திடீர் ராஜினாமாவிற்கு காரணங்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆங்கில நாளிதழான the pioneer-ல் வெளியான தகவலின்படி, ஒரு பாலிவுட் நட்சத்திரத்திற்கு அனுப்பப்பட்ட தொடர்ச்சியான மெசேஜ்களே எல்.முருகன் ராஜினாமா செய்ததற்கு காரணம் என பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர், எல்.முருகனிடம் இருந்து தனக்கு வந்த தகாத வாட்ஸ்அப் மெசேஜ் குறித்து பிரதமர் மோடியின் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் அளித்தாராம்.
அந்த அதிகாரி உடனடியாக இந்த நிகழ்வை ஆளும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாகவே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி ஆகிய இரண்டில் இருந்தும் விலக முருகனுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதுவே எல்.முருகன் ராஜினாமாவுக்கு காரணம் என ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்படடுள்ளது.