SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பாலியல் தொல்லை புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்கிறாரா? பரபரப்பு தகவல்

Kallakurichi MLA Arul Vignesh Case: தவெக தலைமை உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் தவெக தலைமை தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Written By Umabarkavi K
Published: Nov 26, 2026, 10:51 IST | Updated: Nov 26, 2026, 11:24 IST
Join

Kallakurichi MLA Arul Vignesh Case: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார் விவகாரம் தமிழக அரசியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் கடந்து சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால்,  தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்வாரா? கைது செய்யப்படுவரா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது பாலியல் புகார்

பெண் ஐபிஎஸ் அதிகாரியின் செல்போனுக்கு  கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ  அருள் விக்னேஷ் தனது செல்போன் மலம் வாட்ஸ் அப்பில் தகாத முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவர் குடியிருக்கும் அரசு இல்லத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் அந்த பெண் அதிகாரி தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து, பெண் அதிகாரியின் கணவர்  அமைச்சர்  ஒருவரிடமும், தலைமை செயலாளரிடமும் கூறியுள்ளதாக தெரிகிறது.  அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த விவகாரத்தில் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இதையடுத்து, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிகக் எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், அப்படி எந்த சம்பவமும் நடவக்கவில்லை என ஆளுங்கட்சி தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக  காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

இதை அடுத்து, கடந்த நவம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நேரடியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்  விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஐ.ஜி என்.காமினி விசாரணை கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, த.வெ.க அரசுக்கு அதிகரிக்கும் சிக்கல்: இன்று ஆளுநரை சந்திக்கும் உதயநிதி

ராஜினாமா செய்ய முடிவா?

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்படுவாரா  கேள்வி எழுந்துள்ளது. எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்ய முடிவு  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தவெக தலைமை உத்தரவின்படி,  கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ராஜினாமா செய்ய முடிவு  எடுத்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.  ஆனால்,  அது போன்ற எந்த முடிவையும் தவெக தலைமை எடுக்கவில்லை. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன்  தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிகிறது. தலைமையில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக, அவரே ராஜினாமா செய்தால், தவெக அரசு அவரை கைது செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும்  இல்லாமல், நற்பெயரை தக்க வைக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது. காவல்துறை விசாரணைக்கு பின்,  இவ்விவகாரத்தில்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இருந்தாலும், இது தொடர்பாக தவெக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தகுதியற்ற பயனாளிகள் பட்டியலைச் சரிபார்க்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

புகார் மனு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு வழங்கினார்.  இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின், "கள்ளக்குறிச்சி விவகாரத்ததை மூடி மறைக்க தலைமைச் செயலாளர் பேரம் பேசியுள்ளார். 

எனவே, முதல்வர் விஜய், தலைமைச் செயலாளர் பெயரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் குற்றம் இழைத்தவர் பக்கம் நிற்கிறர் முதல்வர் விஜய். குற்றம் செய்தவர்கள் எச்சரிக்காமல் தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்தியுள்ளார். எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES