• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained

TASMAC Employees New Rules : டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. 8 மணி நேர வேலை உள்ளிட்ட முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 26, 2026, 11:09 IST|Updated: Nov 26, 2026, 11:20 IST
joinshare
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained
Image Credit: TASMAC Employees New Rules

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained

2

புதன் பெயர்ச்சி: அட்ரா சக்கை... 5 ராசிகளுக்கு வீசப்போகுது அதிர்ஷ்டக் காற்று

3

அமைச்சர்கள் வெளிநாடு போகாதீங்க!! பிரதமர் மோடி உத்தரவு!! டிசம்பர் 15-க்கு முன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்?

4

பாலியல் தொல்லை புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்கிறாரா? பரபரப்பு தகவல்

5

ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தகுதியற்ற பயனாளிகள் பட்டியலைச் சரிபார்க்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TASMAC Employees New Rules : தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, அவர்களின் பணிநேர சீரமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நிர்வாகம் மிக முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், டாஸ்மாக் இயக்குநர் குழுவின் தீர்மானத்தின்படியும் இந்த புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த விதிகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.  

மேலும் படிக்க | டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: ரூ.50 லட்சம் வரை விபத்து காப்பீடு - முக்கிய அப்டேட்

டாஸ்மாக் கடைகளில் இனி பணி நேரம் மற்றும் ஷிப்ட் முறை எப்படிச் செயல்படும்?

புதிய சுற்றறிக்கையின்படி, டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு இனி தினமும் 8 மணி நேர வேலை மட்டுமே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் நிலையில், பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் மூன்று ஷிப்ட் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, முதல் ஷிப்ட் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மூன்றாவது ஷிப்ட் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் செயல்படும்.

ஒவ்வொரு ஷிப்டிலும் குறைந்தபட்சம் இரண்டு பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கடையில் உள்ள மொத்த பணியாளர்களையும் மூன்று ஷிப்ட்களுக்கும் சமமாகப் பிரித்துப் பணியமர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடை மேற்பார்வையாளர்கள் மூன்று ஷிப்ட்களையும் மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தாலும், அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை மற்றும் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு விதிகள் என்ன?

பணியாளர்களின் ஓய்வு மற்றும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். அந்தந்த கடைகளில் விற்பனை குறைவாக உள்ள நாளைக் கணக்கில் கொண்டு, மாவட்ட மேலாளர் வார விடுமுறை நாளை முடிவு செய்து கடை மேற்பார்வையாளருக்குத் தெரிவிப்பார். இதுதவிர, பணியாளர்களுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு மற்றும் மாதத்திற்கு 2 மணி நேர அனுமதி ஆகியவையும் வழங்கப்படும்.

தற்செயல் விடுப்பு எடுக்கும் நாளில், ஒரே கடையில் மற்றொரு பணியாளர் விடுப்பில் இருந்தால், கடையின் விற்பனை மற்றும் பணிகள் பாதிக்காத வகையில் உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மேலும், பணியாளர்களின் வருகைப் பதிவும் இனி கடைகளில் வழங்கப்பட்டுள்ள கை கருவி மூலமாகவே ஆன்லைனில் பதிவு செய்யப்படும்.  

கை கருவி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை எப்படிச் செயல்படும்?

இதுவரை டாஸ்மாக் பணியாளர்கள் விடுப்பு, பண்டிகை முன்பணம், மருத்துவச் செலவுத் தொகை, பணியிட மாற்றம் மற்றும் சேமநல நிதி தொடர்பான விண்ணப்பங்களைக் காகித வடிவில் தயாரித்து, மேற்பார்வையாளர் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில், இனி அனைத்து நலத்திட்டச் சேவைகளும் கடைகளில் வழங்கப்பட்டுள்ள கை கருவி மூலம் ஆன்லைனில் மட்டுமே செயல்படுத்தப்படும்.  

பணியாளர்கள் தங்களின் தற்செயல் விடுப்பு மற்றும் 2 மணி நேர அனுமதிக்குக் கை கருவி மூலமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைக் கடை மேற்பார்வையாளர் ஆன்லைனிலேயே பரிசீலித்து ஒப்புதல் அளிப்பார்.

பண்டிகை முன்பணம் மற்றும் மருத்துவச் செலவு உதவிகள் எவ்வளவு கிடைக்கும்?

நிதி உதவிகளைப் பொறுத்தவரை, டாஸ்மாக் பணியாளர்களுக்குப் பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய இரண்டு முக்கியப் பண்டிகைகளுக்கும் தலா 10,000 ரூபாய் பண்டிகை முன்பணமாக வழங்கப்படும். இதற்கும் பணியாளர்கள் கை கருவி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் முன்பணத் தொகை, பணியாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து 10 சம தவணைகளில் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

அதேபோல், சுகாதார நிதித் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளைத் திரும்பப் பெறுவதற்கும் கை கருவி மூலமே விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்கள் மற்றும் மருத்துவ பில்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால், மாவட்ட மேலாளர் அவற்றைப் பரிசீலித்து உரிய மருத்துவச் செலவுத் தொகையை வழங்குவார். இதுதவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள குழு காப்பீடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு காப்பீடு உள்ளிட்ட அனைத்து சமூகப் பாதுகாப்புச் சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.  

இந்தப் புதிய நடைமுறைகள் எப்போது முதல் அமலுக்கு வருகின்றன?

டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வருகின்றன. அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் இந்தப் புதிய விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் படிக்க | டாஸ்மாக் தற்காலிக ஊழியர்களுக்கு குட் நியூஸ்! மருத்துவ காப்பீடு ரூ.12 லட்சமாக உயர்வு 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer