• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /புதன் பெயர்ச்சி: அட்ரா சக்கை... 5 ராசிகளுக்கு வீசப்போகுது அதிர்ஷ்டக் காற்று

புதன் பெயர்ச்சி: அட்ரா சக்கை... 5 ராசிகளுக்கு வீசப்போகுது அதிர்ஷ்டக் காற்று

வரும் டிசம்பர் 2ஆம் தேதி புதன் கிரகம் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைகிறது. விருச்சிகம் செவ்வாய் பகவானுக்கு உரியது. அந்த வகையில், புதன் கிரகத்தின் இந்த பெயர்ச்சி 5 கிரகங்களுக்கு நல்ல காலத்தை அழைத்து வரும். அந்த 5 ராசிகளின் பலன்களை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Nov 26, 2026, 10:55 IST|Updated: Nov 26, 2026, 11:04 IST
joinshare
புதன் பெயர்ச்சி: அட்ரா சக்கை... 5 ராசிகளுக்கு வீசப்போகுது அதிர்ஷ்டக் காற்று
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதன் பெயர்ச்சி: அட்ரா சக்கை... 5 ராசிகளுக்கு வீசப்போகுது அதிர்ஷ்டக் காற்று

புதன் பெயர்ச்சி: அட்ரா சக்கை... 5 ராசிகளுக்கு வீசப்போகுது அதிர்ஷ்டக் காற்று

2

அமைச்சர்கள் வெளிநாடு போகாதீங்க!! பிரதமர் மோடி உத்தரவு!! டிசம்பர் 15-க்கு முன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்?

3

பாலியல் தொல்லை புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்கிறாரா? பரபரப்பு தகவல்

4

ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தகுதியற்ற பயனாளிகள் பட்டியலைச் சரிபார்க்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

5

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, த.வெ.க அரசுக்கு அதிகரிக்கும் சிக்கல்: இன்று ஆளுநரை சந்திக்கும் உதயநிதி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Budhan Peyarchi 2026: ஜோதிடத்தின்படி, அறிவாற்றல், பேச்சு, வணிகம், பகுத்தறிவு ஆகியவற்றுக்கு புதன் கிரகம் காரணமாகும். ஜாதகத்தில் புதன் கிரகம் சிறப்பான நிலையில் இருந்தால் ஒருவரது சிந்தனைத் திறன், பேச்சு வழக்கு, பொருளாதார நிலை ஆகியவை சிறப்பாக மாறும்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிகள் புதன் கிரகத்திற்கு உகந்தவை. விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உகந்த ராசி. ரகசியம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றுக்கும் விருச்சிக ராசிக்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது.

மேலும் படிக்க | 2026 கேது பார்வை ஆரம்பம்: தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

புதன் பெயர்ச்சி எப்போது?

அந்த வகையில், டிசம்பர் 2ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து புதன் கிரகம் மாலை 5.27 மணிக்கு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 22ஆம் தேதி காலை வரை புதன் விருச்சிக ராசியில் நீடிக்கும்.

5 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்குது

அந்த வகையில் புதன் விருச்சிகத்தில் பெயர்ச்சி அடைந்தால் மக்களின் பகுப்பாய்வுத் திறன்களும் புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும் நாட்டமும் அதிகரிக்கும். இதனால் பயனடையும் 5 ராசிகளை இங்கு காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் காதல் உறவு கைக்கூடும், திருமண வாழ்க்கையில் முக்கிய கட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வணிக பார்ட்னர்களுடனான ஒத்துழைப்பு மேம்படும், பழைய தொழில் பிரச்னைகள் பேச்சுவார்த்தையிலேயே சீராகும். ஊழியர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த பெயர்ச்சியின் போது புதன் 6ஆம் வீட்டில் இருப்பார். ஜோதிடப்படி, ஆறாம் வீடு என்பது போட்டி, கடன், வேலை, எதிரி உள்ளிட்டவற்றை குறிக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை பெறுவார்கள்.

கன்னி

புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமாக இருக்கும். பேச்சுத் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும். ஊடகம், எழுத்து, சந்தைப்படுத்துதல், கல்வி, தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க பலன்களை பெறுவார்கள். புதிய வேலைகள் அல்லது திட்டங்கள் மூலம் வருமானத்தை பெருக்கும் வாய்ப்புகளும் அமையலாம்.

மேலும் படிக்க | Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

துலாம்

புதன் கிரகம் துலாம் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிக்கும். ஜோதிடத்தின்படி, 2ஆம் வீடு என்பது செல்வம், குடும்பம், பேச்சாற்றால், சேமிப்பு ஆகியவற்றை குறிக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலையை வலுப்படுத்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். வங்கி, நிதி, கல்வி, தொழில் துறையில் இருப்பவர்கள் பலனடையலாம்.

விருச்சிகம்

புதன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியினருக்கு தங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கலாம். சிந்திக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் மேம்படும். பணியில் புதிய பொறுப்புகள் அல்லது பதவிகள் கிடைக்கலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | டிசம்பர் 7இல் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்... இந்த 3 ராசிகளுக்கு சாதகங்கள் அதிகம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan