• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /இளம்பெண்ணுடன் கட்டாய உறவு.. ரூ.3 லட்சம் பறிப்பு.. சிக்கிய திமுக இளைஞரணி நிர்வாகி.. நடந்தது என்ன?

இளம்பெண்ணுடன் கட்டாய உறவு.. ரூ.3 லட்சம் பறிப்பு.. சிக்கிய திமுக இளைஞரணி நிர்வாகி.. நடந்தது என்ன?

Kallakurichi Crime News: திமுக கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காதல் செய்வதாக கூறி கட்டாய உடலுறவு செய்து மூன்று லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகவும் புகார் எழுந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 20, 2026, 13:17 IST|Updated: Nov 20, 2026, 13:45 IST
joinshare
இளம்பெண்ணுடன் கட்டாய உறவு..  ரூ.3 லட்சம் பறிப்பு.. சிக்கிய திமுக இளைஞரணி நிர்வாகி.. நடந்தது என்ன?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Kallakurichi Crime News: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஹஷத்பாஷா என்கிற ஆஷிக். இவர்  திமுக கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் கள்ளக்குறிச்சி கருணாபுரம்  பகுதியைச் சேர்ந்த 39 வயது திருமணம் ஆகாத பெண்ணிடம் நட்பு ஏற்பட்டது. அந்த பெண் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பேஸ்புக்கில் அந்த பெண்மணியிடம் பழக்கம் ஏற்படவே அவரிடம் தொடர்ந்து பேசி அவரின் செல்போன் எண்ணை வாங்கி பேசியுள்ளார். 

திமுக இளைஞரணி நிர்வாகி மீது புகார்

அப்போது தான் ஒரு திமுக நிர்வாகி என்றும் அமைச்சர் ஒருவரின் நேரடி உதவியாளர் என்றும் மேலும் தொழிலதிபர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.  இந்நிலையில், அந்தப் பெண்மணிக்கு தொடர்ந்து காதல் வலை வீசி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று நெருக்கமாக இருந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வபோது அந்த பெண்மணியிடம் மொத்தம் மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து சிறிது நாட்களில் அந்தப் பெண்ணை தவிர்த்து வந்ததால் அவர் தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்க அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரை புறக்கணித்ததாகவும், மேலும் நேரில் சென்று கேட்டபோது தன்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், மேலும் தன்னை அடித்து உதைத்ததாகவும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஷிக் மீது புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆஷிக் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது ஆஷிக் தற்பொழுது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகி பெண் ஒருவரிடம் தவறாக பழகி மூன்று லட்சம் வரை பணத்தையும் பறித்துக் கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: மீனாட்சிக்கு தொடர்பு இல்லை... சொன்னது நிஷாந்த் - மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ரூ.3 லட்சம் பறிப்பு, கட்டாய உறவு என புகார்

மேலும் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆசிக் என்பவர் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 44 வயதுடைய பெண் முகநூல் பக்கம் மூலமாக எனக்கு பழக்கம் ஏற்பட்டு அதன் வாயிலாக தொடர்ந்து நட்பாக பேசியிருந்தோம். 

இவர் தனியார் கல்லூரியின் பேராசிரியராக இருந்து வருகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் திருமணம் செய்ய வில்லை என்றால் உன்னை ஆட்கள் வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மேலும் உன் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வழக்கிலும் என்னை கெடுத்து விட்டதாகவும் புகார் கொடுத்து உன்னையும் உன் குடும்பத்தையும் அவமானப் படுத்துவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே, இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்த கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்த  சம்பவம் அரங்கேறி உள்ளது.

மேலும் படிக்க: Pre Kg மாணவன் கையை கட்டி தாக்குதல்... ஆசிரியரின் ஷாக் செயல் - திருவாரூர் நடந்தது என்ன?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime