SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிக்கலாம்?

Madurantakam Dharapuram Bypolls: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று (அக்டோபர் 6) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிக்கலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 06, 2026, 06:09 AM IST | Updated: Oct 06, 2026, 07:42 AM IST
Join

Madurantakam Dharapuram Bypolls: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அறிவித்தது. அதனை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9 தொடங்கி, செப்டம்பர் 16ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 3 வாரங்களாக இருதொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் நடந்தது.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்

இந்த இடைத்தேர்தலில் ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், மதுராந்தகததில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில்  கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய  கம்யூன்ஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மேலும் படிக்க: தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

இன்று வாக்குப்பதிவு

இதையடுத்து, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) நடைபெற உள்ளது.  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. வாக்குப்பதிவை யொட்டி, இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் கண்காணிப்புகள் போடப்பட்டுள்ளன. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் படாளம், மேலவலம் உட்பட 60 வாக்குச்சாவடிகள் பதற்றமானவே என கண்டறியப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். இதனால், அவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 12 ஆவணங்களை கொண்டு எளிதாக வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  1. ஆதார் கார்டு
  2. MGNREGA பணி அடையாள அட்டை
  3. வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன்)
  4. மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை (தொழிலளார் அமைச்சகம்/ஆய்ஷ்மான் பாரத்)
  5. ஓட்டுநர் உரிமம்
  6. நிரந்தர கணக்கு எண் அட்டை
  7. ஸ்மாரட் அட்டை RGI-ல் வழங்கப்பட்டது
  8. இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
  9. ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன்)
  10. பணி அடையாள அட்டை (அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள்)
  11. நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை
  12. UDID மாற்றுத்திறாளி அட்டை

இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து நீங்கள் எளிதாக வாக்களிக்க  முடியும். இந்த 12 ஆவணங்களில் நீங்கள் எடுத்து செல்லும் ஒரு ஆவண அட்டையை வாக்குச்சாவடி மையங்களில் உள்ளவர்கள் சோதனை செய்வார்கள். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்  இல்லாவிட்டால், வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னை : ரேஷன் கடைகளில் வெங்காயம் கிடைக்கவில்லை - பொதுமக்கள் புகார்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES