• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிப்பு... மற்ற 5 தொகுதிகளுக்கு என்னாச்சு?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிப்பு... மற்ற 5 தொகுதிகளுக்கு என்னாச்சு?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

Written BySudharsan G
Published: Sep 07, 2026, 06:32 PM IST|Updated: Sep 07, 2026, 08:14 PM IST
joinshare
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிப்பு... மற்ற 5 தொகுதிகளுக்கு என்னாச்சு?
Image Credit: Election Commission Of India | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

2

40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

3

Explained: சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? இந்தாண்டு தப்பிக்குமா?

4

கடிப்பிடித்ததால் வந்த விணை! மனைவியின் மார்பு எலும்புகளை உடைத்த கணவன்..

5

ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையை பெறாவிட்டாலும் பிற கட்சிகளின் ஆதரவால் தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் தனது எம்எல்ஏ  பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது 107 எம்எல்ஏக்கள் பலம் தவெகவுக்கு உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தங்களை தவெக உடன் இணைத்துக்கொண்டனர்.

இந்தச் சூழலில், காலியாக இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இடைத்தேர்தல் அட்டவணை இதோ

இந்நிலையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அட்டவணை இதோ:

வேட்புமனு தாக்கல்  செப்டம்பர் 9
மனுதாக்கல் கடைசிநாள் செப்டம்பர் 16
மனுதாக்கல் பரிசீலனைசெப்டம்பர் 17
திரும்பபெற கடைசி நாள் செப்டம்பர் 19
வாக்குப்பதிவுஅக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9

7 தொகுதிகள் காலி

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார், விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா,  மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்தனர். விஜய்யை தவிர அனைவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்று எம்எல்ஏ ஆனவர்கள். இவர்கள் அனைவரும் தற்போது தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

5 தொகுதிகளில் ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை...?

இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் எவ்வித தடையும் விதிக்கவில்லை, ஆனால் மற்ற 5 தொகுதிகளிலும் தடை நீடிக்கிறது. எனவே, அவ்வழக்குகளில் தீர்ப்பு வந்தால் மட்டுமே அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளது.

பிற மாநிலங்களில் இடைத்தேர்தல்

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்கும் தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அந்த தொகுதிக்கும் இடைததேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மேற்கு வங்கத்தில் ரெஞ்சிநகர் மற்றும் நந்திகிராம் தொகுதிகளுக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் நாகோன் PC ஆகிய தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu