SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோயில்களில் செல்போன் எடுத்து செல்லலாம்.. ஆனா ஒரு கண்டீஷன்.. புதிய விதிகள் என்ன?

TNHRCE Temple Mobile Phone Restrictions: செல்போன்களை கோயில்களுக்குள் கொண்டு செல்லாம் என்றும் ஆனால், கோயிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்லும்போது சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 14, 2026, 11:48 AM IST | Updated: Oct 14, 2026, 12:24 PM IST
Join

TNHRCE Temple Mobile Phone Restrictions: அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள், பூஜைகளை போட்டோ, வீடியோ எடுப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் கட்டுப்பாடுகள்

தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரும்பாலான கோயில்கள் உள்ளன. அண்மையில், அறநிலையத்துறை பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அதாவது, செப்டம்பர் 1ஆம் தேதி பக்தர்கள் கோயில்களுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என அறநிலையத்துறை உத்தரவிட்டது.

பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில், திருச்செந்தூர் சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்சுவரர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட 52 கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்லும்போது, செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கோயில்களில் வளாகத்தில் செல்போன்களை பத்திரமாக வைக்க பிரத்யே கவுண்டர்கள் வசதியை அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கோயில்களுக்குள் செல்லும் முன்பு, செல்போன்களை கவுண்ட்டர்களில் கொடுத்து, அதற்கான டோக்கனை பெற வேண்டும். தரிசனத்திற்கு முடித்துவிட்டு, கவுண்டரில் உங்கள் டோக்கனை கொடுத்து, செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: தீய சக்தி திமுக; கொத்து பரோட்டா.. கக்கூஸ் லீடர்! பேருந்து போர்டில் சர்ச்சைககுரிய வாசகம்.. வைரல் வீடியோ!

இப்படியாக தற்போது 52 கோயில்களில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.  இதனால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே கோயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையில் செல்போன்களை வைப்பதற்கு ஒருமுறையும், மீண்டும் எடுப்பது ஒரு முறையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பக்தர்கள் கூறினர்.

நிபந்தனையுடன் கூடிய அனுமதி

இதனால், செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக அறநிலையத்துறை ஆலோசித்து வந்த நிலையில், தற்போது அந்த நடைமுறையில் சில மாற்றங்களை செய்து இருக்கிறது.

பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி, இனி பக்தர்கள் தங்கள் செல்போன்களை கோயில்களுக்குள் எடுத்த செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துதான் எடுத்து செல்ல வேண்டும். கோயில்களுக்குள் செல்போனை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், சிலைகள், பூஜைகள், போட்டோ, வீடியோ, செல்பி எடுப்பது முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. 

திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவருவங்களை புகைப்படம் எடுப்பது. கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுப்பது, வீடியோ போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு வி.ஐ.பி-க்கள் முக்கியஸ்தர்கள் திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. விதியை மீறி கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க: திருச்சி : தீபாவளி இனிப்பு தயாரிப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

52 கோயில்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

  1. தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி
  2. அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
  3. சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்
  4. மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம்
  5. சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி
  6. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
  7. இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்
  8. அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
  9. கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோயில்
  10. பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி
  11. சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை
  12. கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்
  13. சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்
  14. தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காடு
  15. மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை
  16. வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி
  17. மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி
  18. அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர்
  19. பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி
  20. சுவாமிநாதசுவாமி திருக்கோயில் சுவாமிமலை
  21. வன்பத்ர காளியம்மன் திருக்கோயில் தேக்கம்பட்டி
  22. குற்றாயநாதசுவாமி திருக்கோயில் குற்றாலம்
  23. அட்சிப்மக திருக்கோயில்
  24. முருகன் திருக்கோயில் சோலைமலை மண்டபம். மதுரை மாவட்டம்
  25. சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோவில்
  26. நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம்
  27. தஞ்சாவூர் தேவஸ்தான திருக்கோயில்கள்
  28. ஐம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காமல்
  29. காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு
  30. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு
  31. சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி
  32. தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை திருச்சி

உள்ளிட்ட  52 கோயில்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இனி மேற்கண்ட கோயில்களில் செல்போன்களை எடுத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES