TN 10,12th Board Exam Timetable: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயுத்தமாகும் வகையில், அவர்களுக்கான தேர்வு அட்டவணை 5 மாதங்களுக்கு முன்பே ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-27ஆம் கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 மார்ச் 3ஆம் தேத முதல் 2027 மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 மார்ச் 17ஆம் தேதி முதல் 2027 ஏப்ரல் 12ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. மேலும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2027 மே 7ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2027 மே 20ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| தேதி | கிழமை | பாடம் |
| 2027, மார்ச் 17 | புதன்கிழமை | தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் |
| 2027, மார்ச் 25 | வியாழன்கிழமை | ஆங்கிலம் |
| 2027, மார்ச் 31 | புதன்கிழமை | கணிதம் |
| 2027, ஏப்ரல் 5 | திங்கள்கிழமை | அறிவியல் |
| 2027, ஏப்ரல் 9 | வெள்ளிகிழமை | சமூக அறிவியில் |
| 2027, ஏப்ரல் 12 | திங்கள்கிழமை | விருப்ப மொழி
|
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
| தேதி | கிழமை | பாடம் |
| 2027, மார்ச் 3 | புதன்கிழமை | தமிழ் மற்றும் இதர மொழிப்படங்கள் |
| 2027, மார்ச் 8 | திங்கள்கிழமை | ஆங்கிலம் |
| 2027, மார்ச் 12 | வெள்ளிகிழமை | வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
|
| 2027, மார்ச் 15 | திங்கள்கிழமை | கணினி அறிவியல், புள்ளியியல் |
| 2027, மார்ச் 19 | வெள்ளிகிழமை | உயிரியியல், தாவரவியல், வரலாறு |
| 2027, மார்ச் 23 | செவ்வாய் கிழமை | இயற்பியல், பொருளாதாரவியல் |
| 2027, மார்ச் 29 | திங்கள்கிழமை | கணிதம், விலங்கியல், வணிகவியல் |
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாள் படிப்பதற்கான அவகாசம் கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி, கோடை விடுமுறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கப்பட உள்ளது.