• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!

TASMAC News : டாஸ்மாக் ஊழியர்கள் காலி பாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முழு விவரம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 02, 2026, 07:27 AM IST|Updated: Nov 02, 2026, 07:33 AM IST
joinshare
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!
Image Credit: TASMAC

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!

3

தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு! அரசின் கடும் எச்சரிக்கை

4

தமிழகத்தை நெருங்கும் ‘முரசு’ புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் – முழு விவரம்!

5

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TASMAC News : சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதுக்கடைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு ‘காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை’ நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இதன்படி, மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 தொகையை, பாட்டில்களை க்யூஆர் கோட் மூலம் சரிபார்த்து திரும்ப ஒப்படைக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனக் கூறி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், போதிய இடவசதி மற்றும் ஸ்கேனர்கள் இல்லை போன்ற காரணங்களை முன்வைத்து திட்டத்தை செயல்படுத்த ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் படிக்க | CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

நவம்பர் 1-ல் திடீர் போராட்டம்: அரசுக்கு ரூ.150 கோடி இழப்பு

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக அடைத்து திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மது விற்பனை மிக உச்சத்தில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று திட்டமிட்டு கடைகள் அடைக்கப்பட்டதால், மாநில அரசுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.150 கோடி வரை கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையிலும் இந்த செயல் அமைந்ததாகக் கூறி அரசுத் தரப்பில் கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது.

38 மாவட்டங்களிலும் பறந்த மெமோ: மதுரை மண்டலம் முதலிடம்

அரசின் உத்தரவுகளை மீறி தன்னிச்சையாக கடைகளை மூடிய செயல், அரசுப் பணி விதிகளுக்கு எதிரானது என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் தற்போது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கடைகளை அடைத்த மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் கையொப்பமிட்ட விளக்கம் கோரும் மெமோ அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, மதுரை மண்டலத்தில் மிக அதிகளவிலான கடைகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இதே தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நோட்டீஸில் கடும் எச்சரிக்கை

அந்தந்த மாவட்ட மேலாளர்களால் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ குறிப்பாணையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி நண்பகல் 12 மணி முதல் கடைகளை அடைத்து விற்பனைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியதற்குக் காரணம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், "உங்களை ஏன் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கக் கூடாது அல்லது பணிநீக்கம் செய்யக்கூடாது?" என்று விளக்கம் கோரப்பட்டுள்ளது. உடனடியாக பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ள ஊழியர்கள், இதற்கான திருப்திகரமான விளக்கத்தை உரிய காலத்திற்குள் அளிக்காவிட்டால், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்து பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

மக்கள் நலன் மற்றும் அரசு திட்டங்களை முடக்கும் வகையில் ஊழியர்கள் செயல்படுவதை இனி அனுமதிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிர்வாகம் உள்ளது. ஒருபுறம் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கல்வித் தகுதிக்கு ஏற்ப இத்தகைய ஊழியர்களை வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றுப் பணியில் அமர்த்திவிட்டு, டாஸ்மாக் சில்லறை விற்பனையை தனியாரிடம் ஒப்படைப்பதே இதுபோன்ற தொடர் நிர்வாகச் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்ற கருத்துக்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. வரும் நாட்களில் ஊழியர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu