SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டி - திமுக, அதிமுகவின் பொது வேட்பாளரா?

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்க இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 29, 2026, 05:01 PM IST | Updated: Oct 29, 2026, 06:51 PM IST
Join

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. போதிய பெரும்பான்மை இல்லாவிட்டாலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்தது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் இடம்பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை மாறாக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு அளித்தன. தேர்தலுக்கு பின் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற பெயரில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க | தவெகவினர் பேசும் அவதூறுகளுக்கு நடவடிக்கை இல்லை - சீமான்

இரண்டு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்

இது ஒருபுறம், அதிமுக தரப்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். மதுராந்தகம் தொகுதியில் வென்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வென்ற சத்யபாமா ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாகிவிட்டனர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை

இவர்களை தவிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி) ஆகியோரும் தவெகவில் இணைந்திருந்தார்கள். ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி) ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.

அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பாக்கி உள்ள 4 தொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள் மீது தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அறிவிக்கப்படாத அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சந்தீப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்... 17 கைதிகள் தப்பியதன் எதிரொலி - தமிழக அரசு அதிரடி

பொது வேட்பாளரா சீமான்?

திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இன்று சீமான் ஆஜராகியிருந்தார். அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்குகிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார். சாதி, மதத்தை தாண்டி அனைவருக்குமே தான் பொது வேட்பாளர்தான் என்றும்; இப்போது இல்லை என்றைக்குமே தான் பொது வேட்பாளர்தான் என்றும் அவர் பதிலளித்தார். இதன்மூலம், திமுக, அதிமுக சீமானை பொது வேட்பாளராக அறிவிக்கும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும், திமுக காட்சிக் காலத்தில் நடந்த ஈரோடு கிழக்கு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்றும்; அப்போது ஏன் இதுபோன்ற கேள்விகளை கேட்கவில்லை என்றும் எதிர் கேள்வி எழுப்பினார். அதேநேரத்தில் தவெகவினர் எதற்கு தன்னை கண்டு அஞ்சுகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன. வழக்குகள் நிறைவடையும்பட்சத்தில் இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளன.

மேலும் படிக்க | டாஸ்மாக் முக்கிய உத்தரவு: மது பாட்டில்களை இறக்க பணப்பரிவர்த்தனை கூடாது

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES