SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வாரத்தில் 5 நாட்கள் PET வகுப்புகள்.. அதிரடி அறிவிப்பு!

TN Schools PET Classes: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையை அவர் வெளியிட்டுள்ளார்.

Written By Umabarkavi K
Published: Oct 13, 2026, 01:02 PM IST | Updated: Oct 13, 2026, 01:13 PM IST
Join

TN Schools PET Classes: பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான திருத்திய பாட அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். இதில் வாரத்தில் 5 நாட்களுக்கு விளையாட்டு வகுப்புகளை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

5 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள்

தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு P.E.T. வகுப்புகள் உள்ளன. இந்த நிலை மாற்றப்பட்டு, தினமும் பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். 

இதனை செயல்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.  இதில்  உடற்கல்வி, இணையதள கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடக்க வேண்டும் என்றும் இரண்டு நாட்கள் extra curricular activities வகுப்புகளும் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிர திட்டம் : மோதிர விநியோக தேதிகள் அறிவிப்பு!

திருத்திய கால அட்டவணை விவரம்

பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு 90 நிமிடங்கள் ஒரு பாடவேளையும், 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 45 நிமிட் பாடவேளை என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 10அம் வகுப்பு வரை வாரத்தில்  3 நாட்கள் விளையாட்டு வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11,12ஆம் வகுப்புகளக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் வைக்கப்பட்டு இருக்கிறது.  காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்திய கால அட்டவணை விவரம்

பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு 90 நிமிடங்கள் ஒரு பாடவேளையும், 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 45 நிமிட் பாடவேளை என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 10அம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் விளையாட்டு வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடற்கல்வி வகுப்புகளுக்கு 45 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு இசை/கலை மற்றும் கைவினை/சமூக மனவெழுச்சி கற்றல்/உடற்கல்விக்கு வாரத்தில் 2 நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11,12ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் வைக்கப்பட்டு இருக்கிறது.  காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க: நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம். விஜய் பாலாஜி

பாட வேளை நேர ஒதுக்கீடு

1 முதல் 5ஆம் வகுப்பு வரை பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


6 முதல் 12ஆம் வகுப்பு வரையும் பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டு வகுப்புகளை எந்த காரணமும் கொண்டும் ஆசிரியர்கள் மாற்றக் கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். 6,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன என்றும் அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES