கடந்த அக்டோபர் 11ஆம் தேதி, பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்து, போரூ-பூந்தமல்லி மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் பயணத்தையும் அவர் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய்யும் பயணித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது பேசுபொருள் ஆகி இருக்கிறது.
போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் அந்த ரயிலில் பயணம் செய்தனர். அந்த பயணத்தின் போதுதான், முதல்வர் விஜய்க்கு அருகில் இருந்த பெண் ஒருவரும், பிரதமர் மோடிக்கு அருகில் இருந்தவரும் மோடியிடம் சில கையேடுகளை காண்பித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த முதல்வர் விஜய் அமைதியாக அமர்ந்திருந்தார். அதே சமயத்தில், பிரதமர் மோடிக்கு என்ன தெரியும் என்று, மெட்ரோ ரயில் இயக்கம் குறித்து கேட்டு வருகிறார்? என்றும் இணையத்தில் விவாதித்து வந்தனர். இதற்குதான், தற்போது விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மெட்ரோ ரயில் பயணத்தின் போது, 15க்கும் மேற்பட்ட முன்னணி புத்தொழில் முனைவோர்கள், பிரதமர் மோடியை சந்தித்தனர். அந்த சமயத்தில், தமிழ்நாடில் தொடங்கப்பட வேண்டிய தொழில் முயற்சிகள் குறித்தும் அவரிடம் விளக்கி இருக்கின்றனர். இந்த சந்திப்பு குறித்து, புத்தொழில் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி விக்னேஷ் கந்தசாமி என்பவர் பேசினர். அப்போது, தங்களின் நிறுவனத்தின் வழியாக, செயற்கை கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலமாக, கட்டுமான பணிகள், அதன் முன்னேற்றம், அபாயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வாறு கண்காணிக்க முடியும் என விளக்கி கூறினோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி தங்களிடம் சாலைகள், பாலங்களை இதன் உதவியுடன் கண்காணிக்க முடியுமா? என்று கேட்டதாகவும், அதற்கு ‘முடியும்’ என தாங்கள் பதில் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சதுப்பு நில காடுகள் பற்றிய தங்களுடைய மதிப்பீடுகள், ஏரிகள், கண்காணிப்பு தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் தாங்கள் செய்து கொண்ட பணிகள் குறித்து விரிவாக பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து, வேறொரு பிரபல நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் குமார் பேசினார். அப்போது, கடந்த ஜூலை மாதம், தங்களுடைய நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் மூலமாக நானோ செயற்கை கோளை புவியின், சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதாகவும், பிரேசிலில் இருந்து தென்கொரிய ராக்கெட்டை பயன்படுத்தி, சுற்றுப்பாதையில் ஏவ முயற்சித்ததாக தெரிவித்ததாகவும் கூறினார். தொடர்ந்து, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவற்றின் விவரத்தை பிரதமர் மோடியிடம் காட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புத்தொழில் முனைவோர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்ட நரேந்திர மோடி, விண்வெளித்துறை வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், அதற்கு எப்போதுமே மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்ததாக அவருடன் அன்றைய சந்திப்பில் கலந்துரையாடியவர்கள் தெரிவிக்கின்றனர்.