• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

கனமழையால் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை நிலவுவதால், பொதுமக்கள் யாரும் கொடைக்கானலுக்கு தேவையின்றி பயணிப்பதை தவிர்க்குமாறு, காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Written ByYuvashree M
Published: Oct 24, 2026, 05:57 AM IST|Updated: Oct 24, 2026, 06:32 AM IST
joinshare
கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
Image Credit: Kodaikanal | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மாணவர்கள் த*கொலையை தடுக்க..மின்விசிறியை மாற்றிய பல்கலைக்கழகம்! வலுக்கும் கண்டனம்..

மாணவர்கள் த*கொலையை தடுக்க..மின்விசிறியை மாற்றிய பல்கலைக்கழகம்! வலுக்கும் கண்டனம்..

2

கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

3

அக்டோபர் 24 ராசிபலன் : ரிஷபத்திற்கு வாழ்வில் மாற்றம்..மேஷத்திற்கு செம லாபம்! உங்க ராசிக்கு?

4

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு குட் நியூஸ்: வாட் பதிவிலிருந்து முழு விலக்கு

5

பங்குச்சந்தை டிப்ஸ்களை நம்பி ஏமாற வேண்டாம்: முதலீட்டாளர்களுக்காக அறிமுகமானது Kwala Intel!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில், தற்போது வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவும், பொது மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

தீவிரமடையும் வடக்கிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே, திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்களில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழையும், மிதமான மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. இப்படி, மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்கிருக்கும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்து, காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!

இப்படி, தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, முக்கியமான அவசர பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.

அதில், கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மலைப்பாதைகளில் பயணிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Weekend trip turns into a nightmare for tourists heading to #Kodaikanal! Heavy rains & floods have cut off roads to the hill station, leaving cars and buses stranded for nearly two hours. #TNRain #TamilNaduRain #TamilNaduWeather #Kodaikanal https://t.co/VwzF2u10o8

— Ram M Sundaram (@ramsundaramTOI) October 23, 2026

கொடைக்கானலில் மழை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வெளுத்து வாங்கி வரூம் மழையால், ஏற்கனவே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குறிப்பாக, கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாகவே விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதையத்தொடர்ந்து மழை இல்லாத சமயங்களிலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழையில் உட்வில் ரோடு, செண்பகனூர், டைகர் சோலையில் மரங்கள் விழுந்து பின்பு உடனே அகற்றப்பட்டன. ஏரிச்சாலையில், மழைநீர் குளம் போல தேங்கி, கடைகளுக்குள் புகுந்தது. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தது. கொடைக்கானல் நகர், தாண்டிகுடி, மேல்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.

கனமழை காரணமாக அடுக்கம் ரோடு சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீபத்தில், வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து, பாலத்தை கடந்து சென்றது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கொடைகானலில் 166 மி.மீ மழை பதிவானது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால், அதிகாரிகள் துரிதமாக யோசித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather