• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /அக்டோபர் 24 ராசிபலன் : ரிஷபத்திற்கு வாழ்வில் மாற்றம்..மேஷத்திற்கு செம லாபம்! உங்க ராசிக்கு?

அக்டோபர் 24 ராசிபலன் : ரிஷபத்திற்கு வாழ்வில் மாற்றம்..மேஷத்திற்கு செம லாபம்! உங்க ராசிக்கு?

மேஷம் முதல் ரிஷபம் வரை, 12 ராசிகளை பொறுத்து, உங்கள் நாள் எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். உங்கள் ராசிக்கு என்ன பலன் இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போமா?

Written ByYuvashree M
Published: Oct 24, 2026, 05:36 AM IST|Updated: Oct 24, 2026, 05:53 AM IST
joinshare
அக்டோபர் 24 ராசிபலன் : ரிஷபத்திற்கு வாழ்வில் மாற்றம்..மேஷத்திற்கு செம லாபம்! உங்க ராசிக்கு?
Image Credit: october 24 Rasipalan | x post

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

2

அக்டோபர் 24 ராசிபலன் : ரிஷபத்திற்கு வாழ்வில் மாற்றம்..மேஷத்திற்கு செம லாபம்! உங்க ராசிக்கு?

3

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு குட் நியூஸ்: வாட் பதிவிலிருந்து முழு விலக்கு

4

பங்குச்சந்தை டிப்ஸ்களை நம்பி ஏமாற வேண்டாம்: முதலீட்டாளர்களுக்காக அறிமுகமானது Kwala Intel!

5

TNPSC குரூப் 4 தேர்வு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.. எப்படி கலந்து கொள்ளலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். வாருங்கள், உங்கள் ராசிக்கான பலன் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்

எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப்போகும். திடீர் பயணம் உண்டாகும். எந்த ஒரு செயலையும் யோசித்து மேற்கொள்வது நன்மையை தரும். கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள். இணைய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாகன மாற்ற சிந்தனை மேம்படும்.

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த மந்தநிலை சீராகும். புதிய செயல்திட்டங்களில் கவனம் வேண்டும். புதிய வேலை முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மிதுனம்

அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த தடைகள் விலகும்.

கடகம்

கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். தொலைதூரப் பயணங்களில் கவனம் வேண்டும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கன்னி

வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத் தொடர்புகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: 7 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.. நாளை முதல் ராஜயோகம்!!

துலாம்

தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகள் நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொன் பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செயல்படவும். பொழுது போக்கு செயல்களில் ஈடுபாடுகள் ஏற்படும்.

தனுசு

உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் தோன்றும். உற்பத்தி துறைகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

மகரம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். கடினமான பணிகளை எளிமையாக முடிப்பீர்கள். ஆவணம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உண்டாகும். வெளிவட்டத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். உணவு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும்.

மீனம்

பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | சனியின் ராசியில் சந்திரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. கோடீஸ்வர யோகம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan