• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /6 மாதமாக ரேஷன் பொருள் வாங்கவில்லையா? என்ன செய்யலாம்? அக்.1 முதல் முடக்கம்

6 மாதமாக ரேஷன் பொருள் வாங்கவில்லையா? என்ன செய்யலாம்? அக்.1 முதல் முடக்கம்

Ration Card Latest News: 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (அக்டோபர் 1) முதல் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கார்டு முடக்கப்படாமல் இருக்க இகேஒய்சி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 30, 2026, 10:58 IST|Updated: Sep 30, 2026, 13:15 IST
joinshare
6 மாதமாக ரேஷன் பொருள் வாங்கவில்லையா? என்ன செய்யலாம்? அக்.1 முதல் முடக்கம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

2

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

3

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

4

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

5

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ration Card Latest News: ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் இருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் அந்தந்த மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொது விநியோகம் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்க உள்ளனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது. ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையில் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்ட்டை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொருட்களை வாங்க வேண்டும். மேலும், பயனாளிகள் தங்கள் ஆதார் எண்களுடன் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். இந்த நிலையில், மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்து.

மேலும் படிக்க: தாராபுரம் இடைத்தேர்தல்: சூடுபிடிக்கும் களம்... முதல்வர் விஜய் இன்று பரப்புரை, ஏற்பாடுகள் தீவிரம்

ரேஷன் கார்டுகள் முடக்கம்

அதாவது, கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் (அக்டோபர் 1) முடக்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் நாடு முழுவதும் 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கப்பட உள்ளது.  தற்காலிகமாக தான் முடக்கப்படுகிறது. அதே நேரத்தில், ரேஷன் கார்ட்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது. ரேஷன் பொருட்கள் வாங்குவது மட்டுமே இடைநிறுத்தப்படும். ரேஷன் கார்டு முடக்கப்பட்டிருந்தால், அடுத்த 3 மாதங்களுக்குள் அவர்கள் இ கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும். இல்லையெனில், நிரந்தரமாக ரேஷன் கார்டுகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம்.

5 வகையான ரேஷன் அட்டைகள்

  • பொது விநியோகம் திட்டத்தின் கீழ் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அதாவது, பச்சை கார்டு வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் அரிசி மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • வெள்ளை அட்டை (சர்க்கரை) வைத்திருப்பவர்கள் அரிசிக்குப் பதிலாகக் கூடுதலாக 3 கிலோ சர்க்கரை மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இவர்களுக்கு அரிசி வழங்கப்படாது.
  • வெள்ளை அட்டை வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் இருந்து எந்தவிதப் பொருள்களையும் பெற விரும்பாதவர்களுக்காக வழங்கப்படுகிறது. இது முகவரி மற்றும் அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படும்.
  • முன்னுரிமை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு (PHH) இவர்களுக்கு நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவிற்குக் கூடுதலாக உணவுப் பொருட்கள் மற்றும் மானிய விலைப் பொருட்கள் கிடைக்கும்.
  • அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் தோறும் மானிய விலையில் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது

மேலும் படிக்க: தூத்துக்குடி வேலைவாய்ப்பு : டிகிரி முடித்த பெண்களே விண்ணப்பிக்கலாம்! மாத சம்பளம் ரூ.12000
 

ரேஷன் அட்டைதாரர்கள் செய்யக் கூடாத தவறுகள்

  • எந்த வகையான ரேஷன் அட்டை வைத்திருந்தாலும், அதனை மாதந்தோறும் பயன்படுத்த வேண்டும். மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி பதிவு செய்ய வேண்டும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை ரேஷன் கார்டுகளைப் (Duplicate Cards) பயன்படுத்துவது சட்டவிரோதமானது
  • ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யும்போது தவறான முகவரி, பொய்யான குடும்ப விவரங்கள் மற்றும் மறைமுகத் தகவல்களை  அளிக்கக் கூடாது. இது பொருட்கள் வாங்குவதில் சிரமத்தை சந்திப்பீர்கள்.
  • முக்கியமான ரேஷன் அட்டைதாரர்கள் கட்டாயம் இ கேஒய்சியை முடிக்க வேண்டும்.
  • ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பயோமெட்ரிக் அல்லது முக அடையாளத்தைச் சரிபார்ப்பது கட்டாயமாகும்.

மேலும் படிக்க: சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.25 லட்சம் கடனுதவி - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Ration Card