SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சேலம் அரசு வேலைவாய்ப்பு! பெண்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

Salem jobs : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Aug 11, 2026, 09:21 AM IST | Updated: Aug 11, 2026, 09:25 AM IST
Join

Salem jobs : சேலம் மாவட்டம் ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர் மற்றும் பெண் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் பிப்ரவரி 2024 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 3 வழக்குப் பணியாளர்கள் (Case Worker) மற்றும் 1 பெண் காவலர் (Security Guard) பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழக்குப் பணியாளர் (Case Worker) பணியிடத்திற்கான கல்வித் தகுதி BSW/MSW/Counseling Psychology சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை /முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 23 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், தொகுப்பூதியம் ரூ. 18,800/- மற்றும் அதற்கான முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருடபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

காவலர் (Security Guard) பணியிடத்திற்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும், வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தொகுப்பூதியம் ரூ. 12,000/- மற்றும் அதற்கான முன் அனுபவமாக அரசு/தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் www.salem.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விட்டு தங்களது சுய விபரங்களை 21.08.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் அறைஎண்.126, மாவட்ட சமூக நல அலுவலகம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகம், முதல்தளம், அறைஎண்.126 மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES