5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Leave Due to Heavy Rain: தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சதய விழா காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏற்கெனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.