• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /பூந்தமல்லி டூ வடபழனி.. மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. நாளை முதல் அமல்!

பூந்தமல்லி டூ வடபழனி.. மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. நாளை முதல் அமல்!

Chennai Metro Rail Yellow Line: பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மெட்ரோ நிர்வாகம் மாற்றி உள்ளது. நாளை (அக்டோபர் 23) முதல் மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 22, 2026, 09:28 AM IST|Updated: Oct 22, 2026, 09:39 AM IST
joinshare
பூந்தமல்லி டூ வடபழனி.. மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்..  நாளை முதல் அமல்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி வெறும் 3 மணி நேரத்தில் சென்னை டு ஹைதராபாத்: வருகிறது புல்லட் ரயில்.. பணிகள் தொடக்கம்

இனி வெறும் 3 மணி நேரத்தில் சென்னை டு ஹைதராபாத்: வருகிறது புல்லட் ரயில்.. பணிகள் தொடக்கம்

2

பூந்தமல்லி டூ வடபழனி.. மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. நாளை முதல் அமல்!

3

பங்குச்சந்தை ஆய்வில் Kwala Intel போன்ற ஏஐ-ன் பங்கு: வாய்ப்புகளும்... வரம்புகளும்...

4

ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு PFRDA பரிசு: புதிய NPS தளம் அறிமுகம், இனி ஒரே இடத்தில் பல வசதிகள்

5

தமிழகத்தை நோக்கி வரும் ’முரசு' புயல்? அடுத்த 3 நாட்களுக்கு உஷார்! கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Metro Rail Yellow Line: சென்னையில் பிரதான போக்குவரத்தாக இருப்பது மெட்ரோ ரயல் சேவை. மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ஏற்கனவே,  நீலம், பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி முதல் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி - வடபழனி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  பூந்தமல்லி - வடபழனி இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கு தான் தொடங்கப்படுகிறது. இதனால், அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-!! வழித்தடம் 4-ல், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் அக்டோபர் 11, 2026 அன்று மெட்ரோ இரயில் பயணிகள் சேவையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடங்கியது.

இச்சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், வழித்தடம் 4-இல் இரயில் சேவை தொடங்கும் நேரத்தை அக்டோபர் 23, 2026 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6.00 மணியாக மாற்றியமைப்பதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

இந்த நேர மாற்றம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு. வடபழனி மற்றும் பூவிருந்தவல்லி நோக்கி அதிகாலைப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23, 2026 முதல், 15 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடத்தின் இரு திசைகளிலும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வழக்கமான மெட்ரோ இரயில் பயணிகள் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழித்தடம் 4 (மஞ்சள் வழித்தடம்) - பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை இயக்கப்படும் மெட்ரோ இரயில்களின் திருத்தப்பட்ட கால அட்டவணை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 

நாள்பீக் ஹவர் (Peak Hour Frequency)சாதாரண நேரம் (Non Peak Hour Frequency)
திங்கள் முதல் சனிக்கிழமை வரை

காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை  

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்

 

காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை

நண்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை  

இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை

ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள்

 

பீக் ஹவரில் எந்த சேவையில் இல்லைகாலை 6 மணி முதல் 9 மணி வரை  ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்

பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4-இன் வடபழனி மெட்ரோ ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி இரயில் சேவை இரவு 9.00 மணிக்கு இயக்கப்படும். எனவே, பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட இரயில் சேவை பயணங்களைத் நேரத்தைக் கவனத்தில் கொண்டு. தங்களது திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai