• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /பங்குச்சந்தை ஆய்வில் Kwala Intel போன்ற ஏஐ-ன் பங்கு: வாய்ப்புகளும்... வரம்புகளும்...

பங்குச்சந்தை ஆய்வில் Kwala Intel போன்ற ஏஐ-ன் பங்கு: வாய்ப்புகளும்... வரம்புகளும்...

பங்குச்சந்தை ஆய்வில் Kwala Intel போன்ற AI தொழில்நுட்பத்தின் பங்கு, Kwala Intel தரும் வசதிகள், பங்குச் சந்தை நிபுணரும், Tradeswift Broking இணை நிறுவனருமானசந்தீப் ஜெயின் கூறும் முக்கிய வரம்புகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Written BySudharsan G
Published: Oct 22, 2026, 09:07 AM IST|Updated: Oct 22, 2026, 09:16 AM IST
joinshare
பங்குச்சந்தை ஆய்வில் Kwala Intel போன்ற ஏஐ-ன் பங்கு: வாய்ப்புகளும்... வரம்புகளும்...
Image Credit: AI Stock Analysis | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி வெறும் 3 மணி நேரத்தில் சென்னை டு ஹைதராபாத்: வருகிறது புல்லட் ரயில்.. பணிகள் தொடக்கம்

இனி வெறும் 3 மணி நேரத்தில் சென்னை டு ஹைதராபாத்: வருகிறது புல்லட் ரயில்.. பணிகள் தொடக்கம்

2

பூந்தமல்லி டூ வடபழனி.. மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. நாளை முதல் அமல்!

3

பங்குச்சந்தை ஆய்வில் Kwala Intel போன்ற ஏஐ-ன் பங்கு: வாய்ப்புகளும்... வரம்புகளும்...

4

ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு PFRDA பரிசு: புதிய NPS தளம் அறிமுகம், இனி ஒரே இடத்தில் பல வசதிகள்

5

தமிழகத்தை நோக்கி வரும் ’முரசு' புயல்? அடுத்த 3 நாட்களுக்கு உஷார்! கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பங்குச்சந்தை மற்றும் முதலீட்டு ஆய்வில் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கு மற்றும் அதன் வரம்புகள் குறித்து பங்குச் சந்தை நிபுணரும், Tradeswift Broking இணை நிறுவனருமான சந்தீப் ஜெயின் சில பார்வைகளை முன்வைத்துள்ளார்.

பங்குச்சந்தை ஆய்வு, தரவு பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையில் அல்காரிதம் மற்றும் மெஷின் லேர்னிங் அமைப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் களமிறங்கியுள்ளது.

அமெரிக்க சந்தைகளுக்கான உருவாக்கப்பட்டு தற்போது இந்திய முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய Kwala Intel போன்ற தளங்கள், பங்கு ஆய்வை விரைவாகவும் உரையாடல் வடிவில் எளிமையாகவும் மாற்ற முயல்கின்றன.

மேலும் படிக்க | ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

ஆய்வில் ஏஐ-ன் தேவை என்ன?

ஒரு பங்கின் விலை உயர்ந்துவிட்டது என்பதற்காகவோ, கடந்த காலத்தில் நல்ல லாபம் தந்தது என்பதற்காகவோ மட்டுமே முதலீடு செய்துவிட முடியாது. நிறுவனத்தின் நிதி நிலை, கடன் சுமை, எதிர்கால வளர்ச்சி, நியாயமான மதிப்பீடு ஆகியவற்றை ஆராய வேண்டும்.

பல நிறுவனங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கும்போது தரவுகளை ஒப்பிடுவது சவாலானது. Kwala Intel போன்ற ஏஐ கருவிகள் இந்த ஆரம்பக்கட்ட ஆய்வு நேரத்தை வெகுவாகக் குறைத்து, கட்டமைக்கப்டப்ட தரவுகளை வழங்குகின்றன.

அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு

நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், வருவாய் வளர்ச்சி போன்ற அடிப்படை பகுப்பாய்வுக்கும், விலை நகர்வுகள், வர்த்தக அளவு சார்ந்த தொழில்நுட்ப பகுப்பாய்வுக்கும் Kwala Intel போன்ற ஏஐ பெரிதும் உதவுகிறது. குரல் வழி அல்லது உரை வடிவில் கேள்விகளை எழுப்பி நிறுவனங்களை நொடிகளில் ஒப்பிட முடிகிறது.

சந்தையின் அடுத்த நகர்வை AI கணிக்குமா?

  • Kwala Intel போன்ற செயற்கை நுண்ணறிவு பழைய தரவுகளில் இருந்து போக்கை கண்டறிந்து எச்சரிக்கை சமிக்ஞைகளை மட்டுமே தர முடியும். எந்த தொழில்நுட்பத்தாலும் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க முடியாது.
  • அரசின் கொள்கைகள், உலகளாவிய நிகழ்வுகள், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் சந்தையின் உணர்வுகள் ஆகிய எதிர்பாராத காரணிகளால் சந்தை இயங்குவதால் செயற்கை நுண்ணறிவு தரும் தரவுகளை இறுதி முடிவாக ஏற்கக் கூடாது.
  • முன்பு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த வசதி இப்போது சில்லறை முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கிறது. இருப்பினும், AI ஆய்வை எளிதாக்கும் ஒரு துணை கருவி மட்டுமே. மனித புரிதலுக்கு மாற்றல்ல.
  • ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதித் தேவை மற்றும் இடர் ஏற்கும் திறன் மாறுபடும். Kwala Intel போன்ற ஏஐ தரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் சரிபார்த்து, சொந்த ஆய்வு மற்றும் நிதி ஒழுக்கத்துடன் முதலீட்டு முடிவுகளை எடுப்பதே பாதுகாப்பானது.

அதிக தரவும், சரியான முடிவும்

  • சந்தையில் ஒவ்வொரு நாளும் வரவு - செலவு கணக்குகள், காலாண்டு முடிவுகள், விலை நகர்வுகள் எனத் தகவல்கள் மலை போல் கிடக்கின்றன.
  • Kwala Intel போன்ற செயற்கை நுண்ணறிவால் ஒரு நொடியில் பல்லாயிரக்கணக்கான தரவுகளைத் திரட்ட முடியும். ஆனால், அதிகமான தரவுகளை தானாகவே சரியான முடிவுக்கு இட்டுச் செல்லாது என சந்தீப் ஜெயின் தெளிவுபடுத்துகிறார்.
  • எண்களை விட அந்த எண்களின் பின்னணி என்ன, அதில் எது முதலீட்டு முடிவுக்கு மிக அவசியமானது என்பதைப் பிரித்தறியும் திறன் மனித சிந்தனைக்கே உரியது.

சந்தையை கணிப்பது

  • தரவுகளைத் தொகுத்து, கடந்த கால வடிவங்களை ஆராய்வது ஒரு வகை. ஆனால் சந்தை நாளை எந்தப் பக்கம் நகரும் என்பதை கணிப்பது முற்றிலும் வேறானது.
  • பங்குசந்தை வெறும் எண்களால் மட்டும் இயங்குவதில்லை. அரசின் திடீர் கொள்கை மாற்றங்கள், முதலீட்டாளர்களின் எதிர்பாராத உணர்ச்சி மாற்றங்கள் உள்ளிட்டவை சந்தையின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். 
  • எனவே கடந்த கால தரவுகளை கொண்டு ஏஐ தரும் தகவல்கள் தவறாக போகவும் வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். மீண்டும் சொல்வது ஏஐ ஜோதிடர் கிடையாது.

தனிநபர் தேவையும் முதலீட்டு முடிவும்

  • Kwala Intel போன்ற ஏஐ ஒரே நிறுவனத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை இரு வேறு நபர்களுக்கு ஒரே மாதிரியாகத் தரலாம். ஆனால் இருவரும் ஒரே முடிவை எடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது.
  • ஒருவரின் நிதித் தேவை அடுத்த 4-5 மாதங்களிலேயே வரலாம், அவருக்கு அதிகம் ரிஸ்க் உள்ள பங்குகள் உதவாது. மற்றொருவர் 10 ஆண்டுகள் முதலீடு செய்யும் நோக்கில் இருப்பார்.
  • முதலீட்டாளரின் வயது, குடும்பச் சூழல், சேமிப்பு, ரிஸ்கை ஏற்கும் திறன் ஆகியவற்றை ஏஐ கருத்தில் கொள்ள முடியாது. எனவே, இறுதி முடிவை மனிதரே தீர்மானிக்க வேண்டும்.

கேள்விகளை தரமாக கேளுங்கள்

  • Kwala Intel போன்ற போன்ற ஏஐ தரும் பதிலும் வழிகாட்டலும் நீங்கள் என்ன கேள்வியை கேட்கிறீர்கள் என்பதை பொறுத்தே அமையும்.
  • நீங்கள் அரைகுறையான அல்லது தவறான கேள்விகளை கேட்கும்போது, AI தவறான வழிகாட்டலுக்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது.
  • தொழில்நுட்பத்தை விட, முதலீட்டாளர் முறையான, ஆழமான கேள்விகளை உருவாக்கக் கற்றுக் கொள்வதே பயனுள்ள ஆழமான ஆய்வுக்கு வழிவகை செய்யும்.

AI உங்களுக்கு துணை

  • நிறுவன ஆவணங்களை சரிபார்ப்பது, நிதி ஒழுக்கம், சந்தை அனுபவம், சுதந்திரமான சிந்தனை ஆகியவைக்கு எந்தத் தொழில்நுட்பமும் மாற்றாக இருக்க முடியாது.
  • தொழில்நுட்பம் ஆய்வுப் பணியை விரைவாக்குவதற்கே தவிர, முதலீட்டில் இருக்கும் நிச்சயமற்ற தன்மையையோ, இடர்களையோ ஒருபோதும் நீக்காது.

Kwala Intel தளம் மூலம் உங்கள் AI பங்கு ஆய்வை தொடங்குங்கள்: https://kwalaintel.com

மாதம் 199 ரூபாய்க்கு வரம்பற்ற ஏஐ பங்கு ஆய்வு வசதி உங்களுக்கு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் Tradeswift Broking இணை நிறுவனரும், இயக்குநருமான சந்தீப் ஜெயின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. AI சார்ந்த கருவிகள் மூலம் பெறப்படும் தகவல்கள் முதலீட்டு வருமானத்திற்கான உத்தரவாதமோ அல்லது தனிப்பட்ட முலீட்டு ஆலோசனையோ அல்ல. முதலீடு செய்வதற்கு முன் சொந்தமாக ஆய்வு மேற்கொள்ளவும். தேவைப்படும்பட்சத்தில் தகுதிவாய்ந்த நிதி ஆலோசகரக் கலந்தாலோசிக்கவும்)

மேலும் படிக்க | பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. Kwala Intel இந்தியாவில் அறிமுகம்! ரூ.199-ல் AI வசதி

Add Zee News as a Preferred Source
TAGS:
India